பதிவு செய்த நாள்
24 ஆக2018
06:34

புதுடில்லி : முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, இன்போசிஸ், கடந்த ஆண்டிலிருந்து இதுவரை, 4,700 அமெரிக்கர்களை பணியில் அமர்த்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, இன்போசிஸ் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த, 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்க இருப்பதாக அறிவித்தது.மேலும், தொழில்நுட்ப மையங்களை, அமெரிக்காவில் பல இடங்களில் அமைக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இதையடுத்து, இண்டியானா உள்ளிட்ட சில இடங்களில் மையங்களை அமைத்தது. அண்மையில்,வட கரோலினாவில் ஒரு மையத்தை துவங்கி உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்க தொழில்துறையில், புதுமையை வேகப்படுத்தும் வகையில், நாடு முழுக்க, 10 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, 2017ம் ஆண்டிலிருந்து இதுவரை, 4,700 அமெரிக்கர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. வட கரோலினாவில் மட்டும், 500 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
நிறுவனத்தின் தொழில்நுட்ப மையங்கள் மூலமாக, இன்போசிஸ் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுடைய ஊழியர்களின் திறனை மேம்படுத்தும் பயிற்சி வழங்கப்படும். இது, அமெரிக்க வணிக நிறுவனங்களின், ‘டிஜிட்டல்’ மாற்றத்துக்கு உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|