பதிவு செய்த நாள்
24 ஆக2018
06:37

மும்பை : பொறியியல், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வரும், ‘எல் அண்டு டி’ நிறுவனம், முதன் முறையாக, 6 கோடி பங்குகளை திரும்பப் பெறுகிறது.
நேற்று, மும்பையில், இந்நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஒரு பங்கு, 1,500 ரூபாய் வீதம் திரும்பப் பெறப்படும் என, எல் அண்டு டி நிறுவனம் தெரிவித்து உள்ளது. நேற்று முன்தினம், இந்நிறுவனத்தின் பங்கு, 1,322 ரூபாய் ஆக இருந்தது. இதை விட, 13.45 சதவீதம் அதிக விலைக்கு, பங்குகள் திரும்பப் பெறப்பட உள்ளன.
இதற்காக, நிறுவனம், 9,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலவிட உள்ளது. எல் அண்டு டி நிறுவனத்தின், பங்கு மூலதனத்தில், 4.29 சதவீத பங்குகள் மட்டுமே திரும்பப் பெறப்பட உள்ளது. இந்நிறுவனத்தின் வரலாற்றில், முதன் முறையாக, பங்குகள் திரும்பப் பெறப்படுவது குறிப்பிடத்தக்கது.
நேற்று மதியம், இது குறித்த அறிவிப்பு வெளியானதும், எல் அண்டு டி நிறுவன பங்கின் விலை, 2.8 சதவீதம் உயர்ந்து, 1,392க்கு வர்த்தகமானது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|