பதிவு செய்த நாள்
24 ஆக2018
11:25

மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (ஆக.,24) பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிந்ததை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கின. வங்கிகள், உலோகத்துறை பங்குகள் பெரிய அளவில் சரிவை சந்தித்தன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 28.95 புள்ளிகள் சரிந்து 38,307.81 புள்ளிகளாகவும், நிப்டி 20.90 புள்ளிகள் சரிந்து 11,561.90 புள்ளிகளாகவும் இருந்தன.
காலை 10 மணியளவில் வங்கிகள் மற்றும் உலோகத்துறை நிறுவன பங்குகள் சரிவிலிருந்து மீளத் துவங்கியதை அடுத்து, பங்குச்சந்தைகளும் சரிவிலிருந்து மீண்டு, உயர்வுடன் காணப்பட்டன. சென்செக்ஸ் 56.33 புள்ளிகள் உயர்ந்து 38,393.29 புள்ளிகளாகவும், நிப்டி 13.50 புள்ளிகள் உயர்ந்து 11,596.30 புள்ளிகளாகவும் உள்ளன. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|