பதிவு செய்த நாள்
24 ஆக2018
23:24

கோல்கட்டா : ‘‘டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில், திடீரென ஏற்படும் அபரிமிதமான ஏற்ற, இறக்கம், நாட்டின் பொருளாதாரத்திற்கு நல்லது அல்ல,’’ என, எஸ்.பி.ஐ., பொருளாதார ஆலோசகர், சவுமியா கந்தி கோஷ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, ஐந்தாறு மாதங்களில், 64ல் இருந்து, 70 ஆக சரிவடைந்துள்ளது. படிப்படியாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், ரூபாய் மதிப்பு, 72 ஆக சரிந்தால், அது, கவலைக்குரிய, ஆய்வு செய்ய வேண்டிய பிரச்னையாகும். நடப்பு நிதியாண்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.5 சதவீதமாக இருக்கும் என, எஸ்.பி.ஐ., ரீசர்ச் மதிப்பிட்டுள்ளது.
பொதுத் துறை வங்கிகளை கட்டுப்படுத்துவதற்கு, ரிசர்வ் வங்கியிடம் போதுமான அதிகாரம் உள்ளது. தனியார் வங்கிகளை விட, பொதுத் துறை வங்கிகள் தான் தீவிர தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., அமல் ஆகியவை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கம், தற்போது மறைந்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|