பதிவு செய்த நாள்
24 ஆக2018
23:24

மும்பை : கேரளாவில் பெய்த பலத்த மழையால், டயர் தயாரிக்கும் நிறுவனங்களின் லாபம், 1.5 சதவீதம் முதல், 2 சதவீதம் வரை குறையும் என, கணிக்கப்படுகிறது.
கேரளாவில் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கால், டயர் நிறுவனங்களின் லாப வரம்பு, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் குறையும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இந்தியா ரேட்டிங்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் அறிவித்துள்ளதாவது: டயர் நிறுவனங்களின் இயற்கை ரப்பர் தேவையில், 50 சதவீதத்தை உள்நாட்டு உற்பத்தி நிறைவேற்றி வருகிறது. உள்நாட்டு இயற்கை ரப்பர் உற்பத்தியில், கேரளாவின் பங்கு, 90 சதவீதம். இந்நிலையில், மழை காரணமாக, ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், டயர் தயாரிப்பு நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து ரப்பரை இறக்குமதி செய்ய வேண்டியதிருக்கும்.
இதனால், லாப வரம்பு குறையும். மேலும், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவாலும், இறக்குமதிக்கான செலவு அதிகரிக்கும். இதுவும் டயர் நிறுவனங்களின் லாபத்தை பாதிக்கும். இவ்வாறு இந்தியா ரேட்டிங் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|