பதிவு செய்த நாள்
24 ஆக2018
23:25

புதுடில்லி : ‘‘வாராக்கடன் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண, தனியார் வங்கிகளுக்கு நிகராக, பொதுத் துறை வங்கிகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்,’’ என, பேங்க் ஆப் இந்தியாவின் செயல் சாரா தலைவர், ஜி.பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது: வங்கித் துறையின் பெரும்பாலான சிக்கல்களுக்கு, அவற்றின் செயல்பாடுகளில் காணப்படும் பிரச்னைகள் தான் காரணம். பொதுத் துறை வங்கித் தலைமையிடம், பிரச்னைகளை தீர்ப்பதற்கு, ஓரளவு தான் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தனியார் வங்கிகள் அப்படி அல்ல. அவை, சுதந்திரமாக செயல்பட்டு, பிரச்னைகளுக்கு தீர்வு காண்கின்றன. அதே அளவிலான சுதந்திரம், பொதுத் துறை வங்கிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.
பேங்க் ஆப் இந்தியாவின் வாராக் கடனில் பெரும்பாலானவை, அடிப்படை கட்டமைப்பு துறைக்கு வழங்கப்பட்டவை. இக்கடன்கள், வங்கிகள் குழுமத்தின் மூலம் தரப்பட்டவை. இவ்வங்கிகளில், பேங்க் ஆப் இந்தியா, முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற பிரச்னைகளைத் தான், பொதுத் துறை வங்கிகள் சந்திக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|