பதிவு செய்த நாள்
26 ஆக2018
23:19
கடந்த ஐந்தாண்டுகளில் இந்திய சேமிப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இல்லங்களுக்கான சேமிப்பு விகிதமும் குறைந்து உள்ளது. இது தொடர்பான இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் ஆய்வு அறிக்கை விபரம்:
இந்தியாவின் மொத்த சேமிப்பு விகிதம். 2016 – -17ல் முடிந்த ஐந்தாண்டு காலத்தில், 34.6 சதவீதத்தில் இருந்து, 30 சதவீதமாக குறைந்துள்ளது. இதில் முக்கிய பங்கு வகிக்கும் இல்லங்களின் சேமிப்பு, 23.6ல் இருந்து, 16.3 சதவீதமாக குறைந்துள்ளது. இல்லங்களின் சேமிப்பு விகிதம் என்பது கையில் உள்ள செலவிடக்கூடிய தொகை மற்றும் செலவீனங்களில் இருந்து வேறுபட்டது. செலவிடக்கூடிய தொகைக்கு ஏற்ப சேமிப்பு கணக்கில் வைக்கப்படும் தொகையாக இது அமைகிறது.
இல்லங்களின் சேமிப்பு விகிதம் தொடர்ந்து குறைந்தால், அது பொருளாதார வளர்ச்சி மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். சேமிப்பு என்பது மக்கள் செய்யக்கூடிய முதலீட்டிற்கான காரணியாக அமைகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|