பதிவு செய்த நாள்
26 ஆக2018
23:20
எஸ்.சி.எஸ்.எஸ்., என சுருக்கமாக குறிப்பிடப்படும், மூத்த குடிமகன்களுக்கான சேமிப்பு திட்டம், சிறுசேமிப்பு திட்டங்களில் பிரலமான ஒன்றாக இருக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, ‘ரிஸ்க்’ இல்லாத வகையில், சீரான வருமானம் பெற இந்த திட்டம் உதவுகிறது. இந்த திட்டத்தின் பலன்கள் மற்றும் முதலீடு செய்யும் வழிமுறைகள்:
யாருக்கு
மூத்த குடிமகன்கள் சேமிப்பு திட்டம், 60 வயது மேற்பட்டவர்களுக்கானது. இருப்பினும் குறிப்பிட்ட சூழலில், 60 வயதுக்கு குறைவானவர்களும் இதில் இணையலாம். 55 வயதில் விருப்ப ஓய்வு பெற்றவர் இதில் இணையலாம். ஆனால் ஓய்வூதிய பலன் கிடைத்த ஒரு மாதத்தில், தொகையை முதலீடு செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ராணுவத்தினர், 50 வயதில் இணையலாம்.
-முதிர்வு காலம்
இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம், 5 ஆண்டுகள். அதன் பிறகு தேவை எனில் நீட்டித்துக்கொள்ளலாம். முதிர்வு ஆன ஓராண்டு காலத்திற்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சலகம் மற்றும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் வங்கிகளில் சேரலாம். காலாண்டு அடிப்படையில் வட்டி வருமானம் வழங்கப்படும்.
வரம்பு என்ன
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை துவக்கலாம்; ஆனால், மொத்த தொகை, 15 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்க கூடாது. அது அதிக பட்ச முதலீடு. தனியே அல்லது கூட்டு கணக்காக துவங்கலாம். வாழ்க்கை துணையுடன் மட்டும் தான் இணைந்து துவங்க முடியும். முதல் மனுதாரரின் வயதே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
வட்டி விகிதம்
இந்த திட்டம் பாதுகாப்பான முறையில் சீரான வருமானம் அளிக்க கூடியது. இதற்கான வட்டி விகிதம் தற்போது, 8.3 சதவீதமாக இருக்கிறது. மற்ற சிறுசேமிப்பு திட்டங்கள் போலவே, காலாண்டிற்கு ஒரு முறை வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. ஓய்வூதிய தொகைக்கு ஏற்ப மொத்தமாக அல்லது பிரித்து முதலீடு செய்யலாம்.
வரிச்சலுகை
இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு வருமான வரிச்சலுகை பொருந்தும். 80 சி பிரிவின் கீழ், 1.50 லட்சம் ரூபாய் தொகைக்கான வரிச்சலுகை பெறலாம். முதிர்வு காலத்திற்கு முன், தேவை எனில் தொகையை விலக்கி கொள்ளலாம். ஓராண்டிற்கு பின் விலக்கி கொண்டால், தொகையில், 1.5 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|