பதிவு செய்த நாள்
26 ஆக2018
23:21

புதிய வகை வங்கிகளான, பேமென்ட்ஸ் வங்கிகள் கீழ் வரும் அஞ்சல் துறையில் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி வரும் செப்டம்பர், 1ல் நாடு தழுவிய அளவில் துவங்கி வைக்கப்பட உள்ளது. இதற்கான செயலியும் அறிமுகம் செய்யப்படும். இந்த வங்கியின் முக்கிய அம்சங்கள்:
இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, நாடு முழுவதும், 650 கிளைகள் மற்றும் அஞ்சலகம் சார்ந்த 11 ஆயிரம் அணுகல் முனைகளுடன் செயல்படும். நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில், 11 ஆயிரம்அஞ்சல் ஊழியர்கள் வீடு தேடி வந்து சேவை வழங்குவர்.இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சேவையை அனைத்து அஞ்சல் கிளைகளுடன் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கிராமப்புற அளவில் தொடர்பு கொண்டு மிகப்பெரிய வங்கி வலைப்பின்னலை இது உருவாக்கும்.
இந்த வங்கியுடன், அஞ்சல் வங்கி சேமிப்பு கணக்குகளை இணைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மொபைல் செயலி அல்லது அஞ்சல் அலுவலகம் மூலம், கிராமப்புற மக்கள் டிஜிட்டல் வங்கிச்சேவை, நிதிச்சேவைகளை பெற முடியும். இணையம் மூலம் பண பரிவர்த்தனை செய்ய வழி செய்யும். ஆர்.ஜி.டி.எஸ்., நெப்ட் மற்றும் ஐ.எம்.பி.எஸ்., சேவையை அளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தரப்பு ஒப்பந்தம் மூலம், வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிதிச்சேவைகள் அளிக்கப்படும்.
இந்த வகை வங்கிகள் ஒரு லட்சம் ரூபாய் வரை டிபாசிட் ஏற்கலாம். கடன் வழங்க முடியாது. எனினும் பண பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளை வழங்கும். அரசு மானியம், ஓய்வூதியம், 100 நாள் வேலை திட்ட ஊதியம் வழங்க இந்த சேவையை அரசு பயன்படுத்தும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|