பதிவு செய்த நாள்
26 ஆக2018
23:27

பங்குகளை வாங்கும் போது எப்படி, முறையான ஆய்வு தேவையோ, அதே போல, பங்குகளை விற்க தீர்மானிக்கும் போதும் பல்வேறு அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும்.
முதலீடு செய்வது என்பது பல்வேறு அம்சங்களை கொண்டது. சரியான முதலீட்டை தேர்வு செய்ய, அது தரக்கூடிய பலன், முதலீடு கால அளவு, ‘ரிஸ்க்’ அம்சம் உள்ளிட்ட அம்சங்களை பரிசீலிக்க வேண்டும். பங்குகள் என்று வரும்போது, சரியான பங்குகளை தேர்வு செய்ய முறையான ஆய்வு செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது. பங்குகள் ஆய்வு தொடர்பாக எண்ணற்ற வழிகாட்டுதல் குறிப்புகளும் இருக்கின்றன.
ஆனால் முதலீடு செய்வதில், நிதி சாதனங்கள் தேர்வு, அவற்றுக்கான காலம் மற்றும் விற்பனை ஆகிய அம்சங்களும் முக்கியம். ஒரு பங்கை விட்டு வெளியேற, சரியான தருணத்தை அறிந்திருக்க வேண்டும். பங்குகளை வாங்குவது போலவே, விற்பது தொடர்பான முடிவும் முக்கியமானது. பொதுவாக பங்குகளை வாங்குவதற்கான ஆய்வு தொடர்பாக வலியுறுத்தப்படுவது போல, பங்குகள் விற்பனை செய்வது தொடர்பாக, அதிக குறிப்புகள் வழங்கப்படுவதில்லை. எனினும் இதுவும் முக்கியம்.
பலன் ஆய்வு :
எனவே பங்குகளை விற்பனை செய்வதற்கான சரியான நேரத்தை அறிந்திருக்க வேண்டும். எனினும் இங்கு முதலீடு நோக்கில் வாங்கப்பட்ட பங்குகள் தான் குறிப்பிடப்படுகின்றன. ஷார்ட் செல்லிங் எனும் முறை அல்ல. நிறுவன வர்த்தகத்தின் அடிப்படையில் தான் பங்குகளில் முதலீடு செய்கிறோம். ஆனால் எந்த வர்த்தகமும் உள்ளூர் மற்றும் உலக சூழலின் தாக்கத்திற்கு உள்ளாக கூடியது. ஒரு சில வர்த்தகங்கள் மோசமான சூழலை தாக்குப்பிடிக்க கூடியவை என்றாலும், சில வர்த்தகங்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம். இது போன்ற சூழல்களில், முதலீட்டாளர்கள், விற்பனைக்கான உத்தியை தீர்மானித்திருக்க வேண்டும்.
சில நேரங்களில் எதிர்பார்த்ததற்கு முன்னதாகவே பங்குகள் பலன் அளிக்கலாம். அதாவது, எதிர்பார்க்கப்பட்ட காலத்திற்கு முன்னரே அதன் மதிப்பு கணிசமாக உணரலாம். சந்தையில் காளை போக்கு நிலவும் போது இவ்வாறு நிகழலாம். இது போன்ற நேரங்களில் அடிப்படைகளை மீறி, அதன் மதிப்பு அமைந்திருக்கலாம். ரிஸ்க் மற்றும் பரிசுக்கான விகிதமும் பங்கை வாங்கிய சூழலில் இருந்து மாறிஇருக்கலாம். இது விலை அல்லது கால கரெக்ஷனுக்கு வித்திடலாம்.
இதற்கு மாறாக, சில நேரங்களில் வாங்கிய பங்குகள் எதிர்பார்த்த விதத்தில் பலன் அளிக்காமல் போகலாம். பங்குகளை வாங்கிய ஆய்வுக்கு ஏற்ப பலன் அமையாமல், கணிசமாக குறையலாம். எனவே, பங்கு ஆய்வின் அடிப்படையிலான முடிவில் மாற்றம் தேவையா... என, யோசிக்க வேண்டும். அதாவது பங்கை விற்பது பொருத்தமாக இருக்குமா... என, யோசிக்க வேண்டும்.
சூழல் மாற்றம் :
வர்த்தக சூழலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, பங்கு எதிர்காலத்தில் உத்தேசித்த பலனை அளிக்காத நிலை ஏற்படலாம். அல்லது அரசின் பாதகமான கொள்கை முடிவால் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகும் சூழல் நிலவலாம். நிறுவனம் மேற்கொள்ளும் நிர்வாக முடிவுகளும், இதே போன்ற தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது போன்ற சூழல்களிலும், ஆரம்ப ஆய்வு முடிவில் மாற்றம் தேவையா என, பரிசீலிக்க வேண்டும்.
பொதுவாக, முழுவதும் முதலீடு செய்திருக்கும் போது, புதிதாக நல்ல முதலீட்டு வாய்ப்பு வரும் போது பழைய வாய்ப்பை விட்டு வெளியேற நினைப்பது இயல்பானது. ஆனால், புதிய வாய்ப்பை கவனமாக பரிசீலிக்க வேண்டும். சந்தை ஏறி இறங்கும் இயல்புடையது என்பதால், பங்குகளை விற்ற பின், அதன் மதிப்பு உயரலாம் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|