பதிவு செய்த நாள்
26 ஆக2018
23:31
தேசிய பங்குச் சந்தை குறியீடான, ‘நிப்டி’, கடந்த வாரம் உயர்ந்து வர்த்தகமாகி, மீண்டும் ஒரு வரலாற்று உச்சத்தை அடைந்தது. சந்தையைப் பொறுத்தவரை, தொடர்ச்சியாக, எட்டாவது வாரமாக உயர்ந்து வருகிறது. இருப்பினும், கடந்த வார இறுதி நாட்களில், சந்தை வீழ்ச்சி அடைந்து வர்த்தகம் ஆனது.
நுகர்வோர் துறை மற்றும் நிதி சார்ந்த பங்குகளின் வளர்ச்சி, இவற்றுடன் சர்வதேச சந்தையின் வளர்ச்சி போன்றவற்றின் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள், எட்டு வார உயர்வை அடைந்தன. இருப்பினும், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப்பின் புதிய இறக்குமதி வரி விதிப்பு போன்றவற்றால், சந்தையின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மூலதன தொகை, எட்டு லட்சம் கோடி ரூபாயை தாண்டியது. இன்போசிஸ் பங்குகள், நிப்டியில், இந்த ஆண்டு, 27 சதவீதம் உயர்ந்தன. டி.சி.எஸ்., – ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், யெஸ் பேங்க் போன்றவை இன்டெக்ஸ் வளர்ச்சியை குறைத்தன. இந்த ஆண்டு ஆரம்பம் முதல், தொடர் உயர்வில் இருந்து வந்த பயணியர் கார் விற்பனை, கடந்த ஜூலை மாதம், ஜூன் மாதத்தை ஒப்பிடும் போது, 2.71 சதவீதம் குறைந்துள்ளது. கன ரக வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விற்பனை, கடந்த மாதத்தில் அதிகரித்திருந்தது. இத்துறை சார்ந்த பங்குகளின் விலையில், சாதகமான போக்கு நிலவியது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள், அவர்களின் பங்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இந்த மாதம், 2.61 கோடி பங்குகளை, சந்தையில் இருந்து கொள்முதல் செய்துள்ளனர். 2010 மற்றும் 2017ம் ஆண்டுகளில் இவ்வாறு கொள்முதல் நடந்தது குறிப்பிடத்தக்கது. கருத்துக் கணிப்பு நிறுவனமான, ‘மூடிஸ்’, அதன், 2018- – 19ம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த தொகுப்பில், இந்திய பொருளாதாரம், 7.5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த வாரத்தைப் பொறுத்தவரை, நிப்டியின் முதல் ரெசிஸ்டென்ட் ஆக, 11,620 மற்றும் 11,680 இருக்கும்; சப்போர்ட், 11,460 ஆகும்.
கவனிக்க வேண்டிய பங்குகள்
பி.இ.எம்.எல்., , ராலிஸ் , ஐ.டி.சி., , எல்.ஐ.சி., , ஹவுஸிங் , பி.ஏ.எஸ்.எப்.,
-முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|