நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் காணாமல் போகும்  ரிசர்வ் வங்கி துணை கவர்னர்  எச்சரிக்கைநகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் காணாமல் போகும் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ... ... பங்குச்சந்தை: மதிப்­பு­சார் முத­லீடு ஒன்றே வழி பங்குச்சந்தை: மதிப்­பு­சார் முத­லீடு ஒன்றே வழி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
கமாடிட்டி சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2018
23:34

கச்சா எண்ணெய்:
கச்சா எண்­ணெய், தொடர்ந்து ஏழு வாரத்­துக்கு பின், கடந்த வாரம் ஆரம்­பம் முதலே, விலை உயர்ந்து வர்த்­த­கம் ஆனது. இதற்கு, இரு முக்­கிய கார­ணங்­கள். ஒன்று, அமெ­ரிக்க கச்சா எண்­ணெய் இருப்பு விப­ரம் புதன் கிழமை வெளி­வந்­தது. அதில், எதிர்­பார்த்­ததை விட இருப்பு அளவு குறைந்­தி­ருந்­தது. இத­னால், சந்­தை­யில் தட்­டுப்­பாடு நில­வும் என்ற கோணத்­தில் விலை உயர்வு காணப்­பட்­டது.

இரண்­டா­வ­தாக, கடந்த வியா­ழன் அன்று, அமெ­ரிக்கா மற்­றும் சீன அதி­கா­ரி­க­ளுக்கு இடை­யே­யான பேச்­சு­வார்த்­தை­யில் சுமு­க­மான உடன்­ப­டிக்கை ஏற்­ப­ட­வில்லை. இத­னால், இரு நாடு­க­ளுக்­கும் இடையே உள்ள வர்த்­தக மோதல் மீண்­டும் தொட­ரும் என்ற அச்­சத்­தில், கச்சா எண்­ணெய் விலை உயர்ந்து காணப்­பட்­டது.ஆகஸ்ட், 17ம் தேதி­யு­டன் முடி­வ­டை­யும் வாரத்­தில், அமெ­ரிக்க கச்சா எண்­ணெய் இருப்பு, 5.836 மில்­லி­யன் பேரல்­கள் குறைந்­தி­ருந்­தது. இது, சந்தை குறை­யும் என எதிர்­பார்த்த அள­வான, 1.497 மில்­லி­யன் பேரல்­களை விட அதி­க­மா­கும்.

மேலும், ஒவ்­வொரு செவ்­வாய் கிழமை அன்று வெளி­வ­ரும், அமெ­ரிக்­கன் பெட்­ரோ­லி­யம் இன்ஸ்­டி­டி­யூட் கச்சா எண்­ணெய் இருப்பு விப­ரம், 5.170 மில்­லி­யன் பேரல்­கள் குறை­வாக இருந்­தது. ஆகவே, இவ்­விரு எண்­ணெய் இருப்­பு­கள் குறைந்­த­தன் கார­ண­மாக, விலை­யேற்­றம் ஏற்­பட்­டது. ஈரான் நாட்­டின் மீது, அமெ­ரிக்கா கொண்டு வந்த பொரு­ளா­தார தடை, வரும் நவம்­பர் மாதம் முதல் அம­லுக்கு வரு­கிறது. இத­னால், ஏற்­று­மதி பாதிக்­கப்­பட்டு, சந்­தை­யில் கச்சா எண்­ணெய் தட்­டுப்­பாடு நில­வும் என்ற கருத்­தும் உள்­ளது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 4,780 4,696 4,485 4,978என்.ஒய்.எம்.இ.எக்ஸ்., (டாலர்) 67.55 66.20 69.35 70.50


தங்கம், வெள்ளி:
தங்­கம் மற்­றும் வெள்ளி விலை, கடந்த வாரம், 3 சத­வீ­தம் சரிந்து வர்த்­த­கம் ஆனது. 2017ம் ஆண்டு மே மாதத்­திற்கு பின் ஏற்­பட்ட மிகப்­பெரிய, தொடர்ச்­சி­யான சரிவு இது­வே­யா­கும். பிளாட்­டி­னம் மற்­றும் பலே­டி­யம் போன்ற ஆப­ரண கனி­மங்­களின் விலை­யும் சரிந்து வரு­கிறது. அமெ­ரிக்க டாலர் மதிப்பு, சர்­வ­தேச சந்­தை­யில், 13 மாதங்­களில் உச்­சியை தொட்­ட­தன் விளை­வாக, இந்த சரிவு நிகழ்ந்து வரு­கிறது. அமெ­ரிக்கா-- – துருக்கி ஆகிய நாடு­க­ளுக்­கி­டை­யே­யான வர்த்­தக மோதல் கார­ண­மாக, துருக்கி நாண­ய­மான லிரா, கடு­மை­யான சரிவை சந்­தித்­தது. இதன் கார­ண­மாக, டால­ரின் மதிப்பு உயர்ந்­தது.

மேலும், கடந்த சில மாதங்­க­ளாக நிலவி வரும், அமெ­ரிக்கா – சீனா இடை­யி­லான மோதல்­களும், அத­னால் ஏற்­பட்ட வர்த்­த­கத் தடை­கள் கார­ண­மா­க­வும், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை சரிந்து வர்த்­த­க­மாகி வரு­கிறது. தங்­கம் விலையை காட்­டி­லும், வெள்­ளி­யின் விலை சரிவு சற்று அதி­க­மாக காணப்­பட்­டது. தற்­போ­தைய வெள்ளி விலை சரிவு, 2014ம் ஆண்டு பிப்­ர­வ­ரிக்கு பின் ஏற்­பட்ட மிகப்­பெரிய சரி­வா­கும். ஐரோப்­பிய பார்­லி­மென்­டில், கடந்த செவ்­வாய் அன்று நடை­பெற்ற கூட்­டத்­தில், வங்­கி­கள் தங்­கம் வர்த்­த­கத்­தில் ஈடு­பட அனு­ம­தித்து, வர்த்­தக கொள்­கை­களை தளர்த்தி அறி­விக்­கப்­பட்­டது.

டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு, கடந்த வாரம், வர­லாறு காணாத வீழ்ச்சி அடைந்­தது. ஒரு அமெ­ரிக்க டால­ரின் மதிப்பு, 70 ரூபாயை கடந்து வர்த்­த­கம் ஆகிறது. இதன் கார­ண­மாக, சர்­வ­தேச சந்­தை­யில் தங்­கத்­தின் விலை குறைந்­தா­லும், உள்­நாட்டு சந்­தை­யில் தங்­கத்­தின் விலை குறை­யா­மல், மாறாக சிறி­த­ளவு அதி­க­மா­கி­யது குறிப்­பி­டத்­தக்­கது. கடந்த சில மாதங்­க­ளா­கவே, சர்­வ­தேச சந்­தை­யில் விலை குறைந்­தும், நம் நாட்­டின் நாண­யத்­தின் மதிப்பு குறை­வால், உள்­நாட்டு சந்­தை­யில் விலை குறை­யா­மல் இருந்து வரு­கிறது.

தங்கம்:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 29,760 29,310 29,980 30,410காம்எக்ஸ் (டாலர்) 1,205 1,192 1,225 1,238

வெள்ளி:
பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 36,870 36,290 37,230 37,800காம்எக்ஸ் (டாலர்) 14.55 14.10 14.90 15.35

செம்பு :
கடந்த சில வாரங்­க­ளா­கவே, செம்பு விலை குறைந்து வரு­கிறது. அமெ­ரிக்க நாண­யத்­தின் மதிப்பு உயர்ந்­தது, இதற்கு கார­ணம் ஆகும். மேலும், தற்­போது நிலவி வரும் சீனா – அமெ­ரிக்கா இடை­யே­யான வர்த்­தக மோதல்­களும், அத­னால் ஏற்­பட்­டுள்ள ஏற்­று­மதி பாதிப்பு கார­ண­மா­க­வும் தொழிற்­சாலை கனி­மங்­க­ளான செம்பு, இரும்பு, துத்­த­நா­கம், கார்­பன் போன்ற அனைத்து தொழிற்­சாலை மூல­த­னப் பொருட்களின் விலை­யும் சரி­வில் வர்த்­த­க­மாகி வரு­கிறது.

மேலும், லண்­டன் பொருள் வணிக சந்­தை­யில், தொழிற்­சா­லை­களின் குறி­யீட்டு எண், 2015ம் ஆண்­டுக்கு பின், முதன்­மு­றை­யாக, 3 சத­வீ­தத்­துக்கு மேல் சரிந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. செம்பு சுரங்­கத் தொழி­லா­ளர்­கள் வேலை நிறுத்­தத்­தில் சுமு­க­மான பேச்சு நடை­பெ­றும் என்ற சூழ­லும், வேலை­நி­றுத்­தம் கைவி­டப்­பட்டு இயல்பு நிலைக்கு திரும்­பும் என்ற எதிர்­பார்ப்­பும், விலை சரி­வுக்கு கார­ண­மாக அமைந்­தது.

உல­க­ள­வில், செம்பு, அதிக அள­வில் தொழிற்­சா­லைக்கு பயன்­ப­டுத்­தும் நாடு சீனா­வா­கும். அந்­நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சியை முன்­வைத்து, கமா­டிட்டி பொருட்­களின் விலை மதிப்பு நிர்­ண­யம் செய்­யப்­ப­டு­கிறது. தற்­போ­தைய சூழ­லில், நாட்­டின், ஜி.டி.பி., வளர்ச்சி குறை­யும் என்ற அச்­சம் கார­ண­மா­க­வும் விலை சரிந்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

பொருள் வணிக முன்­பேர சந்­தையின் அள­வுகள்சந்தை எஸ் 1 எஸ் 2 ஆர் 1 ஆர் 2 எம்.சி.எக்ஸ்., (ரூபாய்) 414.50 411.00 419.00 423.70

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)