விற்­பனை வரி ஆலோ­ச­னைக் குழு மூன்றாண்டுகளுக்கு பின் கூட்டம்விற்­பனை வரி ஆலோ­ச­னைக் குழு மூன்றாண்டுகளுக்கு பின் கூட்டம் ... புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்; சாதனை படைத்த, ‘சென்செக்ஸ், நிப்டி’ குறியீடுகள் புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்; சாதனை படைத்த, ‘சென்செக்ஸ், நிப்டி’ ... ...
வங்கிகளின் வாராக் கடன் வசூலிப்பு, ‘கெடு’ நீட்டிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2018
23:28

மும்பை : வங்­கி­க­ளுக்கு, மூன்று லட்­சம் கோடி ரூபாய்க்­கும் அதி­க­மான வாராக் கடனை வசூ­லிக்க, விதித்த, ‘கெடு’ மேலும், 15 நாட்­க­ளுக்கு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

பொதுத் துறை வங்­கி­களில் வாங்­கிய, 3.80 லட்­சம் கோடி ரூபாய் கடனை, 70 – 80 நிறு­வ­னங்­கள் செலுத்­தா­மல் உள்­ளன. இக்­க­டன்­களை, 180 நாட்­க­ளுக்­குள் வசூ­லிக்­கு­மா­றும், தவ­றி­னால், திவால் நட­வ­டிக்­கைக்கு உள்­ளாக நேரி­டும் என­வும், ரிசர்வ் வங்கி, பிப்., 12ல் வங்­கி­க­ளுக்கு அறிக்கை அனுப்­பி­யது. இந்­தக் கெடு நேற்­று­டன் முடி­வ­டைந்­தது. இதை­ய­டுத்து, இந்­நி­று­வ­னங்­கள் மீது, திவால் நட­வ­டிக்கை பாயும் என, எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், பல வங்­கி­கள், வாராக் கடன் பிரச்­னைக்கு சுமுக தீர்வு காண, தீவி­ர­மாக முயற்­சித்து வரு­வ­தால், ரிசர்வ் வங்கி, கெடு காலத்தை, மேலும், 15 நாட்­க­ளுக்கு நீட்­டித்­து உள்­ளது.

இது குறித்து, வங்கி உய­ர­தி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: ரிசர்வ் வங்கி அளித்­துள்ள அவ­கா­சத்­திற்­குள், சில வங்­கி­கள், கடன் தீர்வு திட்­டங்­களை அளிக்­கும் என, தெரி­கிறது. எனி­னும், பெரும்­பான்­மை­யான நிறு­வ­னங்­கள், திவால் நட­வ­டிக்­கைக்கு உள்­ளாக வாய்ப்­பு உள்­ளது. மின் துறை­யில் தான், அதி­க­பட்­ச­மாக, 34 நிறு­வ­னங்­க­ளி­டம், 1.50 லட்­சம் கோடி வாராக் கடன் வசூ­லிக்க வேண்­டி­யுள்­ளது. அவை, திவால் நட­வ­டிக்­கைக்கு உள்­ளா­னால், வங்­கி­க­ளுக்கு பெரு­ம­ளவு இழப்பு ஏற்­படும். ஏற்­க­னவே, 18 நிறு­வ­னங்­க­ளின் மனுக்­கள், தேசிய நிறு­வன சட்ட தீர்ப்­பா­யத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளன.

தற்­போது, ஜி.எம்.ஆர்., – சத்­தீஸ்­கர், இந்த் – பாரத் எனர்ஜி, லான்கோ அன்­பரா, ஜிந்­தால் இந்­தியா தெர்­மல் பவர் ஆகிய நிறு­வ­னங்­களும் திவால் நட­வ­டிக்­கைக்கு பரிந்­து­ரைக்­கப்­படும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, ஏழு மின் நிறு­வ­னங்­க­ளின் வாராக் கடன்­க­ளுக்கு தீர்வு காண்­ப­தில், இறு­திக் கட்­டத்­தில் உள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)