பதிவு செய்த நாள்
30 ஆக2018
03:25

மும்பை : நடப்பு நிதியாண்டில், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.4 சதவீதமாக வளர்ச்சி காணும் என, ரிசர்வ் வங்கி மதிப்பிட்டு உள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. வேளாண் உற்பத்தி சிறப்பாக உள்ளது. தொழில், சேவை துறைகளின் உற்பத்தி சூடுபிடித்துள்ளது. சுரங்க நடவடிக்கைகளும் மேம்பட்டுள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களின் விற்பனை உயர்ந்து, லாபம் அதிகரித்துள்ளது. சரக்கு ரயில் போக்குவரத்து வருவாய் உயர்ந்துள்ளது.
நடுத்தர கால அளவில், நாட்டின் சில்லரை பணவீக்கம், 4 சதவீதம்; இதில், 2 சதவீதம் ஏற்ற, இறக்கம் இருக்கலாம் என, வங்கி தெரிவித்துள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கான, நிதிக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நிலவரங்கள், அன்னிய வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் என்றாலும், அதை, அன்னிய நேரடி முதலீடுகள் மூலம் சமாளிக்க முடியும்.
எனவே, நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.4 சதவீதமாக உயரும். இது, கடந்த நிதியாண்டில், 6.7 சதவீதமாக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|