பதிவு செய்த நாள்
01 செப்2018
05:18

மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, நேற்று, முதன் முறையாக, 71 ரூபாயாக வீழ்ச்சி கண்டது.
நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 70.90 வரை சரிவடைந்து, வர்த்தகத்தின் இறுதியில், 70.74ல் நிலை பெற்றது. நேற்று, வர்த்தகத்தின் இடையே, முதன் முறையாக, 71 ரூபாயாக சரிவடைந்தது. எனினும், வர்த்தகத்தின் இறுதியில், 70.93ல் நிலை கொண்டது. தொடர்ந்து ஐந்து நாட்களாக, ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருகிறது.
கடந்த ஓராண்டில், ரூபாய் மதிப்பு, 10.88 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே காலத்தில், பெட்ரோல், டீசல் விலை, முறையே, 13.99 சதவீதம் மற்றும் 23.04 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, கச்சா எண்ணெய் விலை, 22 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, ரூபாய் மதிப்பின் சரிவிற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஈரான் மீதான பொருளாதார தடை, அமெரிக்கா – சீனா வர்த்தக போர், அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவற்றால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது.
இதனால், இறக்குமதி செலவு அதிகரித்து, நடப்பு கணக்கு பற்றாக்குறை பெருகும். எனினும், ‘ரூபாய் மதிப்பு சரிவால் பீதியடையத் தேவையில்லை’ என, எஸ்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|