பதிவு செய்த நாள்
01 செப்2018
05:19

மும்பை : பொதுத் துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி., நிறுவனம் துவங்கி, இன்றுடன், 62 ஆண்டுகள் முடிவடைகிறது.
எல்.ஐ.சி., எனப்படும், ‘லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ நிறுவனம், 1956, செப்., 1ல், ஐந்து கோடி ரூபாய் பங்கு மூலதனத்தில் துவக்கப்பட்டது. இன்று, 28.45 லட்சம் கோடி சொத்து மதிப்புடன், ஆயுள் காப்பீட்டு துறையில் முதலிடத்தில் உள்ளது. இதே காலத்தில், இந்நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் எண்ணிக்கை, 168லிருந்து, 4,826 ஆக அதிகரித்து உள்ளது.
நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை, 1.11 லட்சமாக உயர்ந்துள்ளது. இது தவிர, எல்.ஐ.சி., நிறுவனத்தின் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை விற்பனை செய்யும் முகவர்களாக, ௧1.48 லட்சம் பேர், பணியாற்றுகின்றனர் ; 29 கோடிக்கும் அதிகமான பாலிசிதாரர்கள் உள்ளனர்.
பிரிட்டன், இலங்கை, சிங்கப்பூர், வங்கதேசம், நேபாளம், மொரீஷியஸ், பிஜி, பஹ்ரைன் உட்பட, 14 நாடுகளில், கிளை அலுவலகங்கள், துணை நிறுவனங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்களை கொண்டு உள்ளது. வாடிக்கையாளர்கள், கிளை அலுவலகங்கள், முகவர்கள், புதிய காப்பீட்டு திட்டங்கள் மூலம், நாடு முழுவதும் ஆயுள் காப்பீட்டு சேவையில் ஈடுபட்டு வருவதாக, எல்.ஐ.சி., தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|