தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு ... தாமதமாக வரித்தாக்கல் செய்வது எப்படி? தாமதமாக வரித்தாக்கல் செய்வது எப்படி? ...
ரூபாய் மதிப்பு சரிவும், கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2018
00:01

டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு, 71 ரூபாய் அள­வுக்கு வீழ்ந்­து­விட்­டது என்ற செய்தி, எல்­லா­ரை­யும் பய­மு­றுத்­தி­யுள்­ளது. இன்­னும், 1 ரூபாய் வரை சரி­வ­டை­ய­லாம் என்­பது பல பொரு­ளா­தார நிபு­ணர்­களின் ஆரூ­டம். இதை எப்­படி புரிந்து கொள்­வது; என்ன நடக்­கும்?டாலர் ஓர் உலக நாண­யம். ஒவ்­வொரு நாடும் தன் வர்த்­த­கத்­துக்கு, டால­ரையே அடிப்­படை நாண­ய­மாக வைத்­துள்ளன. இதில் ஏற்­படும் டிமாண்ட், சப்ளை தான், எல்லா பிரச்­னைக்­கும் ஆரம்­பம்.

ஒன்று, டால­ருக்­கான தேவை அதி­க­மாக இருக்க வேண்­டும் அல்­லது போது­மான அளவு டாலர், சுழற்­சி­யில் இல்­லா­மல் இருக்க வேண்­டும். இப்­போது இந்த இரண்டு அம்­சங்­களும் ஒன்­றாக நடந்து கொண்­டி­ருக்­கின்றன.

அன்­னிய செலா­வணி சந்­தை­யில் நடை­பெ­றும் வர்த்­த­கத்­தில், விலை ஏற்ற இறக்­கங்­கள் மிக­வும் சக­ஜம். ஆனால், கடு­மை­யான வீழ்ச்சி, உயர்வு போன்ற அசா­தா­ரண நிகழ்­வு­க­ளுக்கு நிச்­ச­யம் பல கார­ணங்­க­ளை சொல்ல முடி­யும்.

அமெரிக்கா வளர்ச்சி

இதற்­கெல்­லாம் ஆரம்­பம், வழக்­கம்­போல், அமெ­ரிக்கா தான். அங்கே, அதி­பர் டொனால்டு டிரம்ப் ஆட்­சிக்கு வந்த பின், பொரு­ளா­தார முன்­னேற்­றம் ஏற்­பட்டு வரு­கிறது.வேலை­வாய்ப்­பு­கள் உயர்ந்து வரு­கின்றன. பொரு­ளா­தா­ரம் வளர்ச்சி அடை­யும்­போது, பண­வீக்­க­மும் அதி­க­ரிக்­கும். அதை கட்­டுப்­ப­டுத்த, வட்டி விகி­தங்­களை உயர்த்த வேண்­டி­யது அவ­சி­யம். அப்­போது தான் பொரு­ளா­தா­ரத்­தைச் சம­நி­லைப்­ப­டுத்த முடி­யும்.இந்த நடை­முறை தான் அமெ­ரிக்­கா­வி­லும் பின்­பற்­றப்­ப­டு­கிறது.

இந்­தாண்டு, ஏப்­ரல் – ஜூன் வரை­யி­லான இரண்­டாம் காலாண்­டில், 4.2 சத­வீத அள­வுக்கு அமெ­ரிக்கா வளர்ச்சி அடைந்­துள்­ளது. இது, 2016, ஏப்­ரல் – ஜூன் காலாண்­டில், 1.3 சத­வீ­த­மாக இருந்­தது. ஆக, இரண்டு ஆண்­டு­களில், வளர்ச்சி, 200 சத­வீ­தத்தை தாண்­டி­யுள்­ளது.இதை­யொட்டி, அந்­நாட்­டின் பண­வீக்­கம், 2 சத­வீ­தத்தை எட்­டி­யுள்­ளது. இது, அடுத்த இரண்டு ஆண்­டு­களில், 3 சத­வீ­தத்­தைத் தொட­லாம் என்­பது கணிப்பு. உடனே அமெ­ரிக்க மத்­திய வங்கி, வட்டி விகி­தங்­களை உயர்த்த துவங்­கி­விட்­டது.

கடந்த, 2016ல் அந்­நாட்­டில் வட்டி விகி­தம் பூஜ்­ஜி­ய­மாக இருந்­தது. அத­னால், நல்ல வரு­வாய் ஈட்­டக்­கூ­டிய நாடு­களில் முத­லீடு செய்­ய­லாம் என, பல்­வேறு பண்­டு­களும், முத­லீட்­டா­ளர்­களும், வள­ரும் நாடு­களை நோக்கி நகர்ந்­த­னர்.தற்­போது, அமெ­ரிக்­கா­வில் வட்டி விகி­தம், 2 சத­வீ­த­மாக உயர்ந்­து­விட்­ட­தால், பல பண்­டு­களும், முத­லீட்­டா­ளர்­களும், பல்­வேறு நாடு­களில் இருந்து தங்­கள் முத­லீ­டு­க­ளைப் திரும்ப எடுத்து, அமெ­ரிக்­கா­வில் முத­லீடு செய்­யத் துவங்­கி­யுள்­ள­னர்.

இந்த சூழ்­நி­லை­யில், டாலர் தேவை அதி­க­மா­கி­விட்­டது. இத­னால், சர்­வ­தேச அள­வில் டால­ரின் மதிப்பு உயர்ந்து வரு­கிறது. இதை­யொட்டி, வர்த்­த­கம் செய்து வரும் பிற நாடு­களில், நாண­யங்­கள் தத்­த­மது மதிப்­பு­களை இழந்து வரு­கின்றன.இந்­திய ரூபா­யும் இதற்கு விதி­வி­லக்­கல்ல. இந்­தாண்­டில் மட்­டும், டால­ருக்கு இணை­யான இந்­திய ரூபா­யின் மதிப்பு, 11சத­வீ­தம் சரிந்­துள்­ளது.

உள்நாட்டு பிரச்னைகள்

நாம் மட்­டும் இந்த பாதிப்­பைச் சந்­திக்­க­வில்லை. பல நாட்டு கரன்­சி­களும் சரி­வைச் சந்­தித்­துள்ளன. துருக்­கி­யின், லிரா­வில், 40 சத­வீத சரிவு; அர்­ஜென்­டி­னா­வின், பெசோ­வில், 50 சத­வீத சரிவு; பிரே­சி­லின், ரியால், 20 சத­வீத சரிவு; ரஷ்­யா­வின், ரூபிள், 15 சத­வீத சரிவை சந்­தித்­துள்ளன. ஆசிய நாடு­களின் கரன்சி மதிப்­பும் வீழ்ச்சி கண்­டுள்­ளது.

இந்த சூழ்­நி­லை­யில், இந்­தி­யா­வுக்­கென்றே இருக்­கும் பிற பிரச்­னை­களும் சேர்ந்து கொண்­டுள்ளன. முக்­கி­ய­மா­னது நடப்­பு கணக்­கு பற்­றாக்­குறை.அதா­வது, நாம் ஏற்­று­மதி செய்து பெறும் வரு­வாய்க்­கும், இறக்­கு­மதி செய்­வ­தன் மூலம் ஆகும் செல­வுக்­கும் இடையே உள்ள இடை­வெளி தான், நடப்­பு கணக்­கு பற்­றாக்­குறை.நம் ஏற்­று­ம­தியை விட, இறக்­கு­மதி மிக அதி­கம். இத­னால், நாம் பிற நாடு­க­ளுக்­குத் தர வேண்­டிய தொகை­யும் அதி­கம்.

முக்­கி­ய­மாக கச்சா எண்­ணெய். நம் எரி­பொ­ருள் தேவை­யில், ௮0 சத­வீ­தம் அள­வுக்கு கச்சா எண்­ணெயை இறக்­கு­மதி செய்­கி­றோம். இது மட்­டு­மல்ல. உரங்­கள், மருந்­து­கள், இரும்பு தாது ஆகி­ய­வற்­றை­யும் இறக்­கு­மதி செய்­கி­றோம்.இவை எல்­லா­வற்­றை­யும் வாங்க, நமக்கு டாலர் தேவை. டாலரோ அரி­தா­கிக் கொண்டே வரு­கிறது. அத­னால், கூடு­தல் விலை கொடுத்து, டாலரை வாங்க வேண்­டிய நிலை. இத­னா­லும் டால­ருக்கு இணை­யான ரூபா­யின் மதிப்பு சரிவு தொடர்­கிறது.

பாதிப்பு

ரூபாய் மதிப்­பு சரி­வால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­கள் கொஞ்ச நஞ்­ச­மல்ல. பெட்­ரோல், டீசல் விலை உயர்வு, நேர­டி­யாக நம் கண்­ணுக்­குத் தெரி­யக்­ கூ­டி­யது. பண­வீக்­க­மும் இத­னோடு சேர்ந்து கொள்ள, வீட்டு உப­யோ­கப் பொருட்­கள், வெளி­நா­டு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் உதிரி பாகங்­க­ளைக் கொண்டு உற்­பத்தி செய்­யப்­படும் சாத­னங்­கள் ஆகி­ய­வற்­றின் விலை, கணி­ச­மாக உயர்ந்­து­வி­டும்.

உதா­ர­ண­மாக, தங்­கம், வைரம், நிலக்­கரி ஆகி­ய­வற்­றின் விலை உயர்ந்­து­வி­டும். எலக்ட்­ரா­னிக் கரு­வி­கள், தொலை­தொ­டர்பு சாத­னங்­கள், பல்­வேறு நிறு­வ­னங்­க­ளுக்­குத் தேவைப்­படும் உதி­ரி­பா­கங்­கள், ரசா­ய­னங்­கள், மருந்­து­கள், பிளாஸ்­டிக், சமை­யல் எண்­ணெய், அச்­சுக் காகி­தம், உருக்கு, தாதுப் பொருட்­களின் விலை கணி­ச­மாக உயர்ந்­து­வி­டும்.உங்­கள் பிள்­ளை­கள் வெளி­நாட்­டில் படித்­தால், அவர்­க­ளுக்­காக நீங்­கள் செய்­யும் செல­வு­கள் உயர்ந்­து­வி­டும். வெளி­நாட்டு சுற்­றுலா செல்­வ­தால், கொஞ்­சம் கூடு­த­லா­கச் செல­வா­கும்.

என்ன தீர்வு?

ஒவ்­வொரு நாடும் தத்­த­மது நாண­யத்­தின் மதிப்­பைக் காப்­பாற்ற, வட்டி விகி­தங்­களை உயர்த்­து­கின்றன. உதா­ர­ண­மாக, அர்­ஜென்­டினா சமீ­பத்­தில், அடிப்­படை வட்டி விகி­தத்தை, 15 சத­வீ­தம் உயர்த்தி, 60 சத­வீ­த­மாக நிர்­ண­யித்­துள்­ளது.இந்­தோ­னே­ஷியா, இதே­போல் உயர்த்­தி­யுள்­ளது. இந்­தியா, இந்த அள­வுக்கு இல்­லை­யென்­றா­லும், இன்­னும் உயர்த்­த­லாம் என்ற ஆலோ­சனை முன்­வைக்­கப்­ப­டு­கிறது.

ஏற்­க­னவே, 6.5 சத­வீ­த­மாக இருக்­கும் வட்டி விகி­தம், இந்த ஆண்டு இறு­திக்­குள் இன்­னும் இரண்டு முறை உயர்த்­தப்­ப­ட­லாம் என்ற ஹேஷ்­யம் சொல்­லப்­ப­டு­கிறது. இதன் மூலம், பணப்­பு­ழக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்தி, அதன் மூலம் பண­வீக்­கத்­தைக் குறைக்­க­லாம் என்­பது ஒரு திட்­டம்.

இரண்­டா­வது வழி­முறை, அன்­னிய செலா­வணி சந்­தை­யில் நுழைந்து, டாலர்­களை வாங்­கிக் குவிப்­பது. இந்­தோ­னே­ஷியா இதைச் செய்­தி­ருக்­கிறது. அதா­வது தம்­மி­டம் இருக்­கும் சேமிப்­பு­க­ளைக் கொட்டி, டாலரை வாங்­கு­வது.இதை, ரிசர்வ் வங்­கி­யும் அவ்­வப்­போது சிறிய அள­வில் செய்து வரு­கிறது. ஆனால், இது நிரந்­த­ரத் தீர்வு அல்ல. அன்­னிய செலா­வணி கையி­ருப்பு இத­னால் குறைந்­து­போய், வேறு சிக்­கல்­க­ளுக்கு வழி­வ­குத்­து­வி­டும்.

மூன்­றா­வது வழி­முறை, இறக்­கு­மதி வரியை உயர்த்­து­வது. இத­னால், உள்­நாட்­டி­லேயே தயா­ரிக்­கக்­கூ­டிய பொருட்­களை இறக்­கு­மதி செய்­ய­வி­டா­மல் தடுக்­க­லாம்.இந்­தோ­னே­ஷியா, 100 பொருட்­களை இனங்­கண்டு, அவற்­றின் இறக்­கு­ம­திக்கு தடை விதித்­துள்­ளது. அதன் மூலம், தேவை­யற்ற வகை­யில் அன்­னிய செலா­வணி கரை­யா­மல் சமா­ளிக்­கிறது.

இந்­தி­யா­வும் இதே­போல், எதை­யெல்­லாம் உள்­நாட்­டில் உற்­பத்தி செய்­ய­லாம் என, ஒரு பட்­டி­யல் தயா­ரித்து, அவற்­றின் இறக்­கு­ம­தியை குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­க­லாம். கடந்த, 2013ல் ரூபாய் மதிப்பு சரிந்­த­போது, தங்­கத்­தின் இறக்­கு­மதி மீது இந்­தியா கூடு­தல் வரி விதித்­தது நினை­வி­ருக்­க­லாம்.

நான்­கா­வது வழி­முறை, உட­னடி பல­னைத் தரக்­கூ­டி­யது. மன்­மோ­கன் சிங்­கும், ரகு­ராம் ராஜ­னும் இதை முன்­னரே செய்­தி­ருக்­கின்­ற­னர். அதா­வது, வங்­கி­களில், அன்­னி­ய செலா­வ­ணி­யில், ‘டிபா­சிட்’ செய்­யும், எப்.சி.என்.ஆர்.,வைப்பு கணக்­கிற்கு, கவர்ச்­சி­க­ர­மான வட்டி வழங்­க­லாம். இத­னால், வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­கள், தம் நாட்­டில் உள்ள வங்­கி­களில் இருந்து, 1 சத­வீ­தத்­துக்கு கடன் வாங்கி, அதிக அள­வில் டால­ரில் டிபா­சிட் செய்ய முன்­வ­ரு­வர்.

இதன்­மூ­லம், இந்­தி­யா­வுக்­குத் தேவைப்­படும் அன்­னிய செலா­வணி பெரு­ம­ளவு வந்து கொட்­டும். உட­ன­டி­யாக, டால­ருக்கு நிக­ரான ரூபா­யின் மதிப்பு, 68 ரூபாய்க்கு உயர்ந்­து­விட வாய்ப்­புண்டு.எல்­லா­வற்­றுக்­கும் மேல், தற்­சார்பு ஒன்று தான் நம்­மு­டைய பல பொரு­ளா­தார நோய்­க­ளுக்கு ஒரே தீர்வு.நம் இந்­தி­யச் சந்தை மிகப்­பெ­ரிய சந்தை. நமக்­காக உற்­பத்தி செய்து, நம் மக்­கள் மத்­தி­யி­லேயே விற்­ப­னையை மேற்­கொண்டு, உள்­நாட்­டுப் பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வது ஒன்றே நல்ல தீர்வு.

அமெ­ரிக்கா அப்­ப­டித் தான் இப்­போது தற்­சார்பை நோக்கி முன்­னே­றிக் கொண்டு இருக்­கிறது. அமெ­ரிக்­கா­வி­டம் இருந்து நாம், எதை­யெ­தையோ கற்­றுக் ­கொள்­கி­றோம், இதை­யும் கற்­றுக்­கொள்­வோமே!
– ஆர்.வெங்­க­டேஷ்
பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)