தாமதமாக வரித்தாக்கல் செய்வது எப்படி?தாமதமாக வரித்தாக்கல் செய்வது எப்படி? ... கமாடிட்டி சந்தை கமாடிட்டி சந்தை ...
‘டிஜிட்­டல்’ பண பரி­வர்த்­தனை நடு­நி­லை­யா­ளர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2018
00:19

டிஜிட்­டல் பண பரி­வர்த்­த­னை­க­ளுக்­கான புகார்­களை கவ­னிக்க, நடு­நி­லை­யா­ளரை நிய­மிப்­பதை, ரிசர்வ் வங்கி பரி­சீ­லித்து வரு­கிறது.

டிஜிட்­டல் முறை­யி­லான பரி­வர்த்­தனை அதி­க­ரித்து வரு­கிறது. பல­ரும் டிஜிட்­டல் பண பரி­வர்த்­த­னையை நாடி வரு­கின்­ற­னர். அர­சும், டிஜிட்­டல் பண பரி­வர்த்­த­னையை ஊக்­கு­வித்து வரு­கிறது. இந்­நி­லை­யில், டிஜிட்­டல் பரி­வர்த்­தனை தொடர்­பாக எழக்­கூ­டிய புகார்­களை விசா­ரித்து நட­வ­டிக்கை தனியே, ‘ஓம்­பட்ஸ்­மன்’ எனப்­படும் நடு­நி­லை­யா­ளரை அமைக்க, ரிசர்வ் வங்கி பரிசீ­லித்து வரு­கிறது.

மொபைல் வங்­கிச்­சேவை மற்­றும் டிஜிட்­டல் பண பரி­வர்த்­தனை அதி­க­ரித்து வரும் சூழ­லில், புகார்­களும் அதி­க­ரித்து வரு­வ­தால் ரிசர்வ் வங்கி நடு­நி­லை­யாளர் அமைப்பை உரு­வாக்­குவதை பரி­சீ­லித்து வரு­வ­தாக தெரி­வித்­துஉள்­ளது.


தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட நக­ரங்­களில் இந்த வசதி நிறு­வப்­படும். மேலும் ஏற்­க­னவே உள்ள வங்­கிச் ­சே­வை­க­ளுக்­கான நடு­நி­லை­யா­ளர் அமைப்­பை­யும் வலு­வாக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

வரு­மான வரி கணக்கு தாக்­கல் செய்­வ­தற்­கான நீட்­டிக்­கப்­பட்ட அவ­கா­ச­மும் முடிந்­துள்ள நிலை­யில், இன்­ன­மும் வரித்­தாக்­கல் செய்­யா­த­வர்­கள் தாம­த­மாக வரித்­தாக்­கல் செய்­ய­லாம் என்­றா­லும், அத­னால் சில பலன்­களை இழக்க வேண்டி வரும்.வரு­மான வரி வரம்­பிற்­குள் வரு­ப­வர்­கள் குறித்த காலத்­திற்­குள் வரித்­தாக்­கல் செய்ய வேண்­டும். எனி­னும், கெடுவை தவ­ற­விட்­ட­வர்­கள் தாம­த­மா­க­வும் தாக்­கல் செய்­ய­லாம். கடந்த மதிப்­பீட்டு ஆண்டு வரை, தாம­த­மாக தாக்­கல் செய்­தால் அப­ரா­தம் கிடை­யாது.

எனி­னும், 2018 -– 19 மதிப்­பீட்டு ஆண்டு முதல் அப­ரா­தம் பொருந்­தும். இந்த ஆண்டு டிசம்­பர் மாதத்­திற்­குள் தாக்­கல் செய்­தால், 5,000 ரூபாய் வரை அப­ரா­தம் மற்­றும் அதற்கு மேல் தாக்­கல் செய்­தால், 10 ஆயிரம் ரூபாய் வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.எனி­னும், வரு­ம­னம் ஐந்து லட்­சத்­திற்­குள் இருந்­தால் அப­ராத தொகை ஆயி­ரம் ரூபாய்க்­குள் தான் இருக்­கும். மேலும் செலுத்­தப்­பட்ட வரி பாக்கி இருக்­கு­மா­னால், அதற்­கும் அப­ராத வட்டி விதிக்­கப்­படும் வாய்ப்­புள்­ளது. வரி பாக்கி இல்லை எனில், இந்த அப­ராத வட்டி கிடை­யாது.

தாம­த­மாக வரித்­தாக்­கல் செய்ய என்று தனியே வழி­முறை இல்லை. வழக்­க­மான வரித்­தாக்­கல் செய்­வது போலவே தாக்­கல் செய்ய வேண்­டும். எனி­னும், 139 (4) எனும் பிரி­வின் கீழ் தாக்­கம் எனும் வாய்ப்பை தேர்வு செய்ய வேண்­டும். முந்­தைய ஆண்­டுக்­கான கணக்கு எனில் இது பொருந்­தது.

தாம­த­மாக வரித்­தாக்­கல் செய்­தா­லும், தவ­று­கள் இருந்­தால் அதை திருத்­தம் செய்து மீண்­டும் தாக்­கல் செய்­ய­லாம். ஆனால், வழக்­க­மான தாக்­க­லின் போது கிடைக்­கும் சில பலன்­களை இழக்க வேண்­டி­யி­ருக்­கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
வர்த்தக துளிகள் செப்டம்பர் 03,2018
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)