கமாடிட்டி சந்தைகமாடிட்டி சந்தை ... அமெ­ரிக்­கா­வில் என்ன நடக்­கிறது? அமெ­ரிக்­கா­வில் என்ன நடக்­கிறது? ...
தேவை­கள் ஏற்­ப­டுத்­திய மாற்­றங்­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2018
00:29

காலம், மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தும் இயல்­பு­டை­யது. மதிப்­பு­சார் முதலீட்டில் நிகழ்ந்த மாற்­றம் அனைத்­துமே, காலத்­தின் தேவை­கள் சார்ந்தே நடந்­தன.

தேவை­கள் ஏற்­ப­டுத்திய மாற்­றங்­கள், ஆய்­வுக்­குப் பின் ஏற்­பு­டை­ய­தாகி, காலப்­போக்­கில் வழி­மு­றை­யா­க­வும், கல்வி முறை­யா­க­வும் மாறி­யது. இதுவே, மதிப்­பு­சார்முத­லீட்­டின் வர­லாறு.இந்த வர­லாற்­றில் ஓர் இட­மும், இரு நபர்­களும் மிக முக்­கிய பங்கு ஆற்றினர் என்­றால் அது மிகை­யல்ல.

கொலம்­பியா பல்­கலைக்­க­ழ­கம் அந்த முக்கிய இடத்தை தொடர்ந்து வகிக்­கிறது. 88 வய­தா­கும் வாரன் பபட்டும், அவரது வாழ்­நாள் நண்­ப­ரான, சார்லி முங்­க­ரும், அந்த இரு நபர்கள்.பொது­வாக கல்வி நிறு­வ­னங்­கள், காலத்­தோ­டும், மாற்­றங்­க­ளோ­டும் சார்ந்து இயங்­கு­வ­தில்லை என்ற கூற்­றுக்கு விதி­வி­லக்கு, கொலம்­பியா பல்­க­லைக் கழ­கம்.தொழில் முறை­யோடு தொடர் பிணைப்­பில் இந்த பல்­க­லைக்­கழகம் தொடர்ந்து இருந்து வரு­கிறது.

ஒரு முக்­கிய நிகழ்ச்­சியை இங்கு நினை­வு­கூரவேண்­டும். அதற்கு இந்திய தொடர்­பும் இருக்­கிறது. புரூஸ் கிரீன்­வால்ட் என்ற பேரா­சி­ரி­யர், கடந்த காளைச் சந்­தை­யின் உச்­சத்­தில், மும்பை வந்­தார். சந்தை உச்­சத்­தில் இருந்த தின­மான, ஜன­வரி 21, 2008 அன்று, இந்­தி­யா­வின் முக்­கிய முத­லீட்­டா­ளர்­களின் மத்­தி­யில் உரை­யாற்­றி­னார்.

அந்த உரை­யில், ‘எனக்கு இந்­திய பங்­கு­க­ளின் மதிப்பு, மிக­வும் அதி­க­மாக தோன்­று­கிறது; எதை­யும் வாங்­கும் விருப்ப­மில்லை’ என, தெளி­வாக சொன்­னார்.அற்­பு­த­மான அந்த உரை­யில், ஒரு கல்­வி­யா­ளர், எப்­படி தொழில் புரி­வோ­ரி­டம் உரை­யாட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டினார். படிப்­ப­றி­வும், பட்­ட­றி ­வும் இணைந்து இயங்­கும் நேரங்­கள் பலரை காப்­பாற்றும் என்­றால், அதுவே ஒரு கல்வி முறை­யின் வெற்றி. மதிப்­பு­சார் முத­லீட்­டில், கொலம்­பியா பல்­க­லைக்­க­ழ­கம் அதை தொடர்ந்து செய்து வரு­கிறது.

பபட், -முங்­கர் ஆகிய இரு மனி­தர்­க­ளின் பங்­கும் மிக அபா­ர­மா­னது. அவர்­கள், உல­கிற்கு மதிப்­பு­சார் முத­லீட்டை கற்­பித்த முறை, அந்த கல்வி ஏற்­படுத்­திய தாக்கம், வரலாற்று சிறப்பு உடையது.அதை, அவர்­கள் செய்த விதம் வர­லாற்று தன்மை பெற்­று­விட்­டது.

அவர்­கள் இதை செய்ய, தங்­கள் நிறு­வ­ன­மான, ‘பெர்க்­‌ஷ­யர் ஹாத்வே’யின் ஆண்டு அறிக்கை மடலை உரு­வாக்­கி­னர். இந்த ஆண்டு மடல், முத­லில், 1965ல் எழு­தப்­பட்­டது. கடந்த, 53 ஆண்­டு­க­ளாக தொடர்ந்து எழு­தப்­பட்ட இந்த அறிக்­கை­கள், உலக அள­வில் முத­லீட்டு பாடங்­க­ளாக மாறி­விட்­டன.

ஆண்­டுக் கூட்­டத்­திற்கு முன், இந்த அறிக்­கையை வாசித்­து­விட்டு, அந்த கூட்­டத்­திற்கு யாத்­திரை சென்று, அவர்­க­ளிடம் கேள்வி கேட்­பதை, முதலீட்­டா­ளர்­கள் ஒரு பழக்­க­மாக்கி விட்­ட­னர்.மே மாதத்­தின் முதல் வார இறு­தி­யில் நடக்­கும் இந்த கூட்­டத்­திற்கு, கிட்டத்­தட்ட, 40 ஆயி­ரம் பேர், உல­கின் அத்­தனை மூலை­களில் இருந்­தும் செல்­கின்­ற­னர்.

இந்த ஆண்டு சீனா­வில் இருந்து, 4,000 பேர்; அது­வும், மாண­வர்­கள் யாத்­திரை செல்­கின்­ற­னர் என்றால் பாருங்­கள்.இவர்­கள் இரு­வரும் எழு­திய அத்­தனை ஆண்டு மடல்­க­ளை­யும் படித்து விட்­டால், மதிப்பு சார் முத­லீடு பற்றி ஒரு­வர் தம் அறிவை வளர்த்­துக் ­கொள்ள முடி­யும் என்பது, பெரு­வா­ரி­யான சீன முத­லீட்­டா­ளர்­க­ளின் நம்பிக்கை.சீன மொழி­யாக்­கம் செய்­யப்­பட்டு, இவை பல்­க­லைக்­க­ழக பாட­மாககற்­பிக்­கப்­ப­டு­கின்­றன.

கேள்வி முறை கல்வி, மதிப்­பு­சார் முத­லீட்­டின் வளர்ச்­சிக்கு வழி­வ­குக்க, இவ்­வி­ரு­வ­ரின் பங்கு மிக முக்­கி­யம். ஐம்­பது ஆண்­டு­ க­ளாக தாம் கற்றதை பிறருடன் பகிர்ந்து கொண்ட அபா­ர­மான முறை, கல்­விக்கே சிறந்த உதா­ர­ணங்­கள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)