தேவை­கள் ஏற்­ப­டுத்­திய மாற்­றங்­கள்தேவை­கள் ஏற்­ப­டுத்­திய மாற்­றங்­கள் ... வெளிநாடுகளுக்கு ஆவின் நெய் வெளிநாடுகளுக்கு ஆவின் நெய் ...
அமெ­ரிக்­கா­வில் என்ன நடக்­கிறது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2018
00:33

அமெ­ரிக்­கா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி, 2018 இரண்­டாம் காலாண்­டில், 4.2 சத­வீத அள­வுக்கு வளர்ந்­துள்­ளதுஎன்ற செய்தி, பல­ரை­யும் ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளது.

அவ்­வ­ளவு பெரிய பொரு­ளா­தா­ரம், எப்­படி இவ்­வ­ளவு வேக­மாக வளர்­கிறது? உண்­மை­யி­லேயே டிரம்ப், மேஜிக் ஏதே­னும் நடக்­கி­றதா?அப்­படி நடப்­ப­தாக, அதி­பர் டொனால்டு டிரம்ப் ஆத­ர­வா­ளர்­கள் தெரி­விக்க, ‘இல்லை இது சும்மா குமிழ் தான், சீக்­கி­ரம் வெடித்­து­விடும்’ என, எதிர்க்­கட்­சி­யினர் தெரி­விக்­கின்­ற­னர்.

அமெ­ரிக்க அதி­பராக, டொனால்டு டிரம்ப் பொறுப்­பேற்­ற­போது, அமெ­ரிக்­கா­வில், 3 சத­வீத வளர்ச்­சியை கொண்டு வருவேன் என, சப­தம் போட்­டார். அது, தேர்­தல் நேரப் பேச்சு, உண்மை­யாக முடி­யாது என, வாதிட்­ட­வர்­கள் உண்டு.ஆனால் தற்­போது, 2018ம் ஆண்­டின் ஏப்­ரல், மே, ஜூன் காலாண்­டின், ஜி.டி.பி., எண்­கள் திருத்­தப்­பட்­டுள்­ளன. முத­லில், 4.1 சத­வீ­த­மாக அறி­விக்­கப்­பட்ட, ஜி.டி.பி., தற்­போது, 4.2 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது.

முதல் காலாண்­டில், அந்­நாட்­டின், ஜி.டி.பி., 2.2 சத­வீ­த­மாக இருந்­தது.இத­னோடு சேர்ந்து இன்­னும் இரண்டு தர­வு­க­ளை­யும் பார்த்­து­வி­டு­வோம்.அமெ­ரிக்­கா­வில் தற்­போது வேலை­யற்­றோர் விகி­தம், 3.9 சத­வீ­த­மாகக் குறைந்­துள்­ளது. 2008 ஜூலை­யில், 5.8 சத­வீ­த­மாக இருந்த வேலை­யற்­றோர், மேன்­மே­லும் அதிகரித்து, 2012 ஜூலை மாதம், 8.2 சத­வீ­த­மாக உயர்ந்­த­னர்.

அந்த நிலை­யோடு ஒப்பிட்­டுப் பார்க்­கும்­போது, தற்­போது வேலை­யற்­றோர் எண்­ணிக்கை பல மடங்கு குறைந்­துள்­ளது.இன்­னொரு தரவு, நுகர்­வோரின் நம்­பிக்கை. உல­கி­லேயே அமெ­ரிக்கா தான் நுகர்­வோரின் சொர்க்­கம்.அங்கே பொருட்­களை வாங்­கிக் குவிப்­ப­தும், அதற்­கா­கச் செல­வி­டு­வ­தும், கடன் வாங்­கு­வ­தும், அந்­தக் கட­னைச் செலுத்­து­வ­தற்­காக கூடு­த­லாக உழைப்­ப­தும், அவர்­க­ளு­டைய இயல்­பான பண்பு. நுகர்­வோர், செலவு செய்­ய­ வில்லை எனில், ஏதோ பிழை என்று அர்த்­தம்.

அந்த வகை­யில் பார்க்­கும்­போது, ஆகஸ்ட் மாதத்­தில் நுகர்­வோர் நம்­பிக்கை பெரு­ம­ளவு உயர்ந்­துள்­ள­தாக, அந்த நாட்­டில் வெளி­யா­கி­யுள்ள கணிப்பு ஒன்று கூறு­கிறது.அதா­வது, தைரி­ய­மா­கப்பொருட்­களை வாங்­கு­ கின்ற­னர் என்­றால்,துணிச்­ச­லோடு கடன் வாங்கத் தயா­ராக இருக்­கின்­ற­னர் என்று அர்த்­தம்.

கடன் வாங்­கத் தயார் என்­றால், நிச்­ச­யம் அவர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­களும், போதிய வரு­வா­யும் இருப்­ப­தாக அர்த்­தம்.இந்த மூன்று அல­கு­களை­யும் ஒருங்­கி­ணைத்­துப் பார்த்­தால், அமெ­ரிக்­கா­வில் டிரம்ப் ஏதோ மாயா­ஜா­லம் செய்­து­கொண்­டி­ருக்­கி­றார் என்றே புரி­கிறது. அது என்ன?

அதற்கு மூன்று காரணங்­கள் சொல்­லப்­ப­டு­கின்றன. அவை, கொள்கை மாற்றங்­கள், கட்­டுப்­பா­டு­களைத் தளர்த்­து­தல், வரிச் சலுகைகள். பின்­வ­ரும் விஷ­யங்­கள் நேர­டி­யாக, ஜி.டி.பி., வளர்ச்­சிக்கு உதவி­யுள்­ளன.

சென்ற காலாண்­டில், அமெ­ரிக்­கா­வின் ஏற்­று­ம­தி­கள் பெரு­ம­ளவு உயர்ந்­துள்­ளன. மொத்த, ஜி.டி.பி.,க்கு பங்­க­ளிக்­கும் விதத்­தில் அந்­நாட்­டின் ஏற்­று­ம­தி­கள், 9.3 சத­வீ­தம் அள­வுக்கு உயர்ந்­துள்­ளன. அத­னால், அந்­நாட்­டுக்கு கிடைத்­துள்ள வரவு அதி­க­மா­கி­யுள்­ளது.

ஏன் இந்த திடீர் ஏற்றுமதி உயர்வு?

இது இயல்­பா­னது அல்ல. மாறாக, சீனா மீதும், இதர நாடு­கள் மீதும், அமெ­ரிக்கா, பல பொருட்­க­ளுக்கு விதித்­துள்ள வரி­கள் அம­லுக்கு வரு­வ­தற்கு முன், அவ­சர கதி­யில் செய்­யப்­பட்ட ஏற்­று­ம­தி­கள் என்று விளக்கம் கொடுக்­கின்­ற­னர், அங்­குள்ள பொரு­ளா­தார நிபு­ணர்­கள்.ஆக இது, ‘ஒன் டைம் வொண்­டர்!’ அடுத்த காலாண்­டில், இப்­ப­டிப்­பட்ட வளர்ச்­சியை ஏற்­று­மதி துறை பெற வாய்ப்­பில்லை என்­பது எதிர்­வா­தம்.

இரண்­டா­வது அம்­சம், மீண்­டும் அமெ­ரிக்­கா­வில் புதிய தொழிற்­சா­லை­கள் துவங்­கப்­ப­டு­கின்­றன. டிரம்ப் இதை தன் தேர்தல் பிர­சா­ரத்­தின்­போது வாக்­க­ளித்து இருந்­தார். அதா­வது, அங்கே தொழில் வளர்ச்­சிக்­கான வாய்ப்­பு­கள் ஏற்­பட்­டி­ருப்­ப­தையே இந்த முயற்­சி­கள் காட்­டு­கின்­றன.அதா­வது, பெரு­நி­று­வ­னங்­க­ளுக்கு வரிச் சலு­கை­கள் வழங்­கப்­பட்­ட­தால், அங்கே தொழில் முத­லீ­டு­கள் உயர்ந்­துள்­ளன. 7.3 சத­வீத அள­வுக்கு இந்த முதலீடு­கள் பெரு­கியுள்ளன. இத­னால், வளர்ச்சி உரு­வாகி வரு­கிறது என்று வாதம் வைக்கப்­ப­டு­கிறது.

அமெ­ரிக்க, ஜி.டி.பி.,க்கு பங்­க­ளிக்­கும் மற்­றொரு அம்­சம், அந்­நாட்­டின் வீடு­க­ளின் மீதான முத­லீடு. இரண்­டாம் காலாண்டு, ஜி.டி.பி., வளர்ச்­சிக்கு ஹவு­சிங் துறை, 12 சதவீதம் உத­வி­யி­ருக்­கிறது. மக்­க­ளுக்கு புது வீடு­களை வாங்­கு­வ­தற்­கான நம்­பிக்கை பிறந்­தி­ருப்­ப­தாலே தானே, இந்த வளர்ச்சி ஏற்­பட்­டுள்­ளது என்ற வாத­மும் வைக்­கப்­ப­டு­கிறது.

உண்­மை­யில், 4.2 சதவீத வளர்ச்சி என்­பது, எல்­லோ­ரை­யும் ஆச்­ச­ரி­யம் மட்­டு­மல்ல, கல­வ­ரப்­ப­டுத்­தி­யும் உள்­ளது. இதை எப்­படி புரிந்­து­கொள்­வதுஎன்­ப­தில் தான் குழப்­பம்.வேலை­வாய்ப்­பு­க­ளின் எண்­ணிக்கை உயர்ந்­தி­ருந்­தா­லும், சென்ற ஆண்­டில் இருந்த அள­வில் தான் சம்­ப­ளங்­கள் உள்­ளன. ஆண்டு­தோ­றும் மிகச் சாதா­ர­ண­மாக உயர வேண்­டிய அள­வுக்­குக் கூட சம்­ப­ளங்­கள் உய­ர­வில்லை.

சென்ற ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது சம்­பளம், 1.2 சத­வீத அள­வி­லேயே உள்­ளது. மேலும், பலரும் பகுதி நேர வேலை­களில் மட்­டுமே ஈடு­பட்­டுள்ள­னர்.இவர்­கள் முழு­நேர வேலைக்­குச் செல்­லவே விருப்­பம். ஆனால், தற்­போ­தைக்கு பகுதி நேர வேலை­வாய்ப்பே கிடைத்து வரு­வது ஒரு பெரிய துர­திர்ஷ்­டம்.

பிற நாடு­கள் மீது, அமெரிக்கா விதித்­துள்ள கூடு­தல் வரி­க­ளால், சர்­வ­தேச அள­வில், ‘வர்த்­த­கப் போரே’ உரு­வா­கி­யுள்­ளது. வர்த்­த­கத்­தையே ஒரு போர் ஆயு­த­மாக பயன்­படுத்தி வரு­ப­வர் டிரம்ப். அப்­படி இருக்­கும்­போது, இனி வரும் காலாண்­டு­களில் எப்­படி ஏற்­று­ம­தி­களை அதி­க­ரிக்க முடி­யும்?

அமெ­ரிக்கா விதித்த கெடு­பி­டி­யான வரி­க­ளுக்கு எதிர்­வி­னை­யாக, பல நாடு­களும் அமெ­ரிக்­கப் பொருட்­கள் மீது கூடு­தல் வரி விதித்­துள்­ளன. குறிப்­பாக, ஏட்­டிக்­குப் போட்­டி­யாக சீனா செயல்­பட்­டுக் கொண்டே வரு­கிறது. இத­னால், எதிர்­கா­லத்­தில் அமெ­ரிக்கா தான் அதி­கம் பாதிக்­கப்­ப­டப் போகிறது.

நுகர்­வோர் நம்­பிக்கை உயர்ந்­தி­ருப்­பது உண்மை தான். ஆனால், அவர்­க­ளு­டைய சேமிக்­கும் பழக்­க­மும் அதி­க­ரித்­துள்­ள­தாக மற்­றொரு ஆய்வு கூறு­கிறது. 2005ல், 1.9 சத­வீ­த­மாக இருந்த சேமிப்­பு­கள் தற்­போது, 3.2 சத­வீத அளவுக்கு உயர்ந்­துள்­ளது. அதா­வது, அவர்­கள் கடன் வாங்­கத் தயங்­கு­கின்ற­னர். எதிர்­கா­லம் இதே­போன்று இருக்­கும் என்ற எதிர்­பார்ப்பு இல்லை. எதிர்­கா­லத்தை மன­தில் கொண்டு சேமிக்­கின்­ற­னர்.

மொத்தத்­தில், தற்­போ­தைய, 4.2 சத­வீத உயர்வு என்­பது ஒரு குமிழ் தான். இதே வேகத்­தில், அடுத்­த­டுத்த காலாண்­டு­களில் வளர்ச்சி இருக்­கப் போவ­தில்லை.அமெ­ரிக்­கா­வால் ஏற்­படக்­கூ­டிய பாதிப்­பையே, உல­கம் அதி­கம் சந்­திக்­கப் போகிறது என்­பது தான் உண்மை.
ஆர்.வெங்­க­டேஷ்

பத்­தி­ரி­கை­யா­ளர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)