பதிவு செய்த நாள்
04 செப்2018
00:22
மும்பை:ரிசர்வ் வங்கி, 9 ஆண்டுகளுக்கு பின், முதன் முறையாக, கடந்த, 2017 – 18ம் நிதியாண்டில், 8.46 டன் தங்கம் வாங்கியுள்ளது.இதற்கு முன், 2009, நவம்பரில், சர்வதேச நிதியத்திடம் இருந்து, 200 டன் தங்கம் வாங்கப்பட்டது. ஜூன், 30 நிலவரப்படி, ரிசர்வ் வங்கி கையிருப்பில், 566.23 டன் தங்கம், உள்ளது. இது, 2017ம் ஆண்டு, இதே காலத்தில், 557.77 டன்னாக இருந்தது.ரிசர்வ் வங்கி கையிருப்பில் உள்ள தங்கத்தில், கரன்சி புழக்கத்திற்கு, 292.30 டன்; வங்கித் துறையின் சொத்துக்கு, 273.93 டன் தங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மதிப்பீட்டு ஆண்டில், வங்கித் துறையின் சொத்து மதிப்பு, 11.12 சதவீதம் உயர்ந்து, 62,702 கோடியில் இருந்து, 69,674 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதற்கு, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் சரிவும், புதிதாக வாங்கப்பட்ட, 8.44 டன் தங்கமும், துணை புரிந்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|