பதிவு செய்த நாள்
09 செப்2018
00:43
சேலம்:வடமாநில துவரம் பருப்பு வரத்து அதிகரித்ததால், கிலோவுக்கு, மூன்று ரூபாய் விலை சரிந்துள்ளது.
தமிழகத்தின்,
80 சதவீத துவரம் பருப்பு தேவையை, மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம்,
குஜராத் மாநிலங்கள் பூர்த்தி செய்கின்றன. நடப்பாண்டு ஜனவரியில்,
துவரம் பருப்பு, கிலோ, 90க்கு விற்றது.இந்நிலையில்,
தமிழகத்திலும் விளைச்சல் அதிகரித்ததால், துவரம் பருப்பின் விலை,
படிப்படியாக சரிந்து, கிலோ, 72 ரூபாய்க்கு விற்றது.
வடமாநிலங்களில்
இருந்து வாரத்துக்கு, 200 லாரிகளில் பருப்பு வந்தது. இது, தற்போது,
250 லாரிகளாக உயர்ந்துள்ளது. இதனால் துவரம் பருப்பு விலை, கிலோவுக்கு,
மூன்று ரூபாய் சரிந்தது. அதன்படி, 72க்கு விற்ற துவரம் பருப்பு
முதல் தரம் கிலோ, 69 ரூபாய், 63க்கு விற்ற இரண்டாம் தரம், 60 ரூபாய்,
52க்கு விற்ற மூன்றாம் தரம், 50 ரூபாயாக சரிந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|