துவரம் பருப்பு விலை சரிவுதுவரம் பருப்பு விலை சரிவு ...  கமாடிட்டி சந்தை கமாடிட்டி சந்தை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வர்த்தகம் நள்ளிரவு வரை நீட்டிக்க எதிர்ப்பு தரகர்களுடன் பேச பங்கு சந்தைகளுக்கு, ‘செபி’ உத்தரவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2018
00:46

மும்பை:பங்கு வர்த்­த­கத்தை, நள்­ளி­ரவு வரை நீட்டிக் ­கும் திட்­டம் தொடர்­பாக, பங்கு தரகு நிறு­வ­னங்­க­ளு­டன் பேச்சு நடத்தி, சுமுக தீர்வு காணு­மாறு, மும்பை மற்­றும் தேசிய பங்குச் சந்­தை­களை, ‘செபி’ கேட்­டுக் கொண்­டுள்­ளது.


இந்­திய பங்­குச் சந்­தை­கள், காலை, 9:00 மணி முதல் மாலை, 3:30 வரை செயல்­ப­டு­கின்­றன. அதே­ச­ம­யம், விளை­பொ­ருள் முன்­பேர சந்தை, காலை, 10:00 மணி முதல் இரவு, 11:55 மணி வரைஇயங்கு­கிறது.இத­னால், சர்­வ­தேச விளை­பொ­ருள் முன்­பேர சந்தை நில­வ­ரங்­க­ளின் அடிப்­ப­டை­யில், இந்­தி­யா­வில் வர்த்­த­கம் மேற்­கொள்ள முடி­கிறது.


அறிக்கை


அது­போல, பங்­குச் சந்தை வர்த்­த­கத்­தை­யும் நள்­ளி­ரவு வரை நீடிக்க வேண்­டும் என, மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்தை­கள் கோரி வந்­தன.இத­னால், அமெ­ரிக்கா, பிரே­சில் உள்­ளிட்ட மேற்­கத்­திய நாடு­க­ளின் பங்­குச் சந்­தை­களில் ஏற்­படும் தாக்கத்தை அன்றே அறிந்து, அதற்­கேற்ற உத்­தி­களை, முத­லீட்­டா­ளர்­களும், வர்த்­த­கர்­களும் கையாள முடி­யும் என, கூறப்­ப­டு­கிறது.


எனவே, மும்பை மற்றும் தேசிய பங்­குச் சந்­தை­கள், அவற்­றின் பங்கு வர்த்­தக நேரத்தை நீட்­டிப்­பது தொடர்­பான திட்ட அறிக்­கையை, செபி­யி­டம் அளித்­தன.அதை பரி­சீ­லனை செய்த செபி, முதற்­கட்டமாக, பங்குச் சந்­தை­யில், முன்­பேர வர்த்­த­கத்தைமட்­டும் நள்­ளி­ரவு வரை
நீட்­டிக்க, மே, 4ல் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்தது.


இதை­ய­டுத்து, அக்., 1 முதல் முன்­பேர பங்கு வர்த்­த­கத்தை, இரவு, 11:55 மணி வரை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை செய்­வ­தில், பங்­குச் சந்­தை­கள் மும்­மு­ர­மாக ஈடு­பட்டு வந்­தன.
இந்­நி­லை­யில், முன்­பேர பங்கு வர்த்­தக நேரத்தை நீட்­டிக்­கும் திட்டத்­திற்கு, பங்கு தரகர்கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துஉள்­ள­னர்.


வருவாய்


பங்கு வர்த்­த­கத்தை நீட்­டிப்­ப­தால் வரு­வாய் அதிகரிக்­கும் என்ற போதி­லும், ஊழி­யர்­கள் நிய மனம் உட்­பட, நிர்­வா­கச் செலவுகள் அதி­க­ரிக்­கும் என, பங்­குத் தர­கர்­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.இதை­ய­டுத்து, முன்­பேர பங்கு வர்த்­தக நேரத்தை நீட்­டிக்­கும் திட்­டம் குறித்து, பங்கு தர­கர்­க­ளு­டன் ஆலோ­சனை நடத்தி, சமூக உடன்­பாடு காணு­மாறு, பங்­குச் சந்­தை­ களுக்கு, செபி உத்­த­ர­விட்டுள்­ளது.


இதற்கு, பங்­குத் தரகு நிறு­வ­னங்­கள் வர­வேற்பு தெரி­வித்­துள்­ளன. இத­னால், முன்­பேர பங்கு வர்த்­தக நேரத்தை நீட்­டிக்­கும் திட்­டம், அக்.,1ல் அம­லுக்கு வரு­வது கேள்விக்குறி­யாகி உள்­ளது.


கருத்­தொற்­றுமை அவ­சி­யம்


புதிய திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தும் போது, அனைத்து தரப்­பி­ன­ரி­டம் கருத்­தொற்­றுமை ஏற்­ப­டுத்­து­வதுஅவசி­யம். பொறுப்­புள்ள நிறு­வ­னங்­கள், இந்த வழி­முறை­யைத் தான் பின்­பற்­றும். மிக முக்­கி­ய­மான, நீண்­ட­கால தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக் கூடிய திட்­டம் குறித்து,எங்­க­ளு­டன் கலந்து பேசு­மாறு செபி கூறி­யி­ருப்­பது மகிழ்ச்சி அளிக்கிறது

உத்­தம் பக்ரி

தலை­வர், மும்பை பங்­குச் சந்தை தர­கர்­கள் கூட்­ட­மைப்பு

செல­வி­னங்­கள் அதி­க­ரிக்­கும்



பங்கு வர்த்­தக நேரத்தை நீட்­டிப்­ப­தால் கிடைக்­கும்கூடு­தல் வரு­வாயை விட, நிர்­வாக செல­வி­னங்­கள்அதி­க­ரிக்­கும். இது தொடர்­பாக ஆலோ­சனை நடத்த, செபி அழைப்பு விடுத்­துள்­ளது வர­வேற்­கத்­தக்­கது


அலோக் சுரி­வாலா

நிர்­வாக இயக்­கு­னர், சுரி­வாலா செக்­யூ­ரிட்­டீஸ்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)