பதிவு செய்த நாள்
10 செப்2018
01:00

பங்குச் சந்தை முருகேஷ் குமார்தேசிய பங்குச் சந்தை
குறியீட்டு எண் நிப்டி, முந்தைய வாரத்தைக் காட்டிலும், கடந்த வாரம்,
உச்சத்தில் வர்த்தகம் ஆரம்பித்த போதிலும், திங்கள் முதல் புதன் வரை
குறைந்தும், வார இறுதி நாட்களில் வியாழன் மற்றும் வெள்ளியில்
உயர்ந்தும் முடிவுற்றது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், அனைத்து
வாரங்களிலும் உயர்ந்து வர்த்தகம் ஆன சந்தை, செப்டம்பர் மாத
துவக்கத்தில், முதல் வாரத்தில் சரிவுடன் முடிவடைந்தது
குறிப்பிடத்தக்கது.மேலே சொன்ன வார இறுதி நாட்களான, வியாழன் மற்றும் வெள்ளியில், ஆட்டோமொபைல் துறை, மெட்டல், எனர்ஜி மற்றும் மருத்துவத் துறை சார்ந்த பங்குகளின் வளர்ச்சி, சந்தைக்கு சாதகமாக அமைந்தது.
பொதுத்
துறை வங்கிகள் சார்ந்த பங்குகள் மற்றும் நிதித் துறை சார்ந்த
பங்குகளின் விலைகளில், சிறிதளவு உயர்வு காணப்பட்டது.நிப்டி உயர்வதற்கு காரணமாக, ‘ஹீரோ மோட்டோ கார்ப், பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல்’ உள்ளிட்ட பங்குகள் அமைந்தன. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தொடர்ந்து சரிவில் இருந்து வருகிறது.இந்தியாவில் அதிக அளவில் இறக்குமதி ஆகும் பொருட்களாக, கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் தங்கம் ஆகும்.
ஆனால், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இறக்குமதி, 5 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது.பெருகி
வரும் தொழில்நுட்ப புரட்சி மற்றும் தொழில்நுட்ப சாதனங்களின் தேவை
ஆகியவற்றால், இத்தகைய பொருட்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது.
நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக, பற்றாக்குறை,
5 ஆண்டு உச்சத்தில், 18.02 மில்லியன் அமெரிக்க டாலர்களை, ஜூலை மாதத்தில் எட்டியுள்ளது.இந்த வாரம் நிப்டியை பொறுத்தவரை, ரெசிஸ்டென்ட், 11,690 மற்றும் 11,760 ஆகும். சப்போர்ட், 11,500 ஆகும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|