பதிவு செய்த நாள்
10 செப்2018
01:20

இத்தனை ஆண்டுகளாக, சீனா மீது பாய்ந்து கொண்டு இருந்த அமெரிக்க அதிபர், தற்போது, நேரடியாக இந்தியா மீது பாய ஆரம்பித்து விட்டார். என்ன நடந்தது? ஏன் நடந்தது?
உலக வர்த்தக அமைப்பு, மானியங்களையும், சலுகைகளையும் வழங்கியதன் மூலம் சீனாவை வளர்த்து விட்டு விட்டது. வளரும் நாடுகள் என்ற பெயரில், பல நாடுகளும் மானியங்களைப் பெற்று, முன்னுக்கு வந்து விட்டன. அமெரிக்காவும் வளரும் நாடு தான். அதன் வளர்ச்சி முக்கியம். அதனால், இனிமேல் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் மானியங்களை வழங்க முடியாது என்ற ரீதியில், அமெரிக்க அதிபர்,டொனால்டு டிரம்ப் பேசியுள்ளது, கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே,
சீனாவைப் பொருளாதார ரீதியாகக் கட்டுப்படுத்த வேண்டும்
என்பதற்காக, அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள்
மீது, அமெரிக்கா கூடுதல் வரி விதித்து, ‘வர்த்தக போரு’க்குப்
பிள்ளையார் சுழி போட்டது. அது, தொடர்ச்சியாக சர்வதேச அளவில்,
அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவின் மீது பாய்ச்சல். நாம் என்ன செய்துவிட்டோம் அல்லது செய்யத் தவறிவிட்டோம்?அதிபர்
டிரம்ப் ஒற்றை வரியில் மிரட்டினாலும், அதற்குள் ஏராளமான பொருள்
இருக்கிறது. கொஞ்சம் வரலாற்றுக்குப் போனால் தான், அவரது
கோபத்துக்கான காரணம் புரியும்.இரண்டாம் உலக போருக்குப் பின், அமெரிக்கா பல நாடுகளோடு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டது.
இதில், ஏராளமான வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன. இதற்கு, ‘காட்’ ஒப்பந்தங்கள் என்றே பெயர். உலக வர்த்தக அமைப்புக்கு முந்தைய அமைப்பு தான், காட் எனப்படும், ‘ஜெனரல் அக்ரிமென்ட் ஆன் டாரிப் அண்டு டிரேட்’ என்பது.வளரும் நாடுகள் அப்போது ஏழை நாடுகளாக இருந்ததால், வரிச் சலுகைகளை ஏராளமாகப் பெற்றன.
அப்போது,
ரஷ்யாவோடு, ‘பனிப்போர்’ இருந்ததால், அதற்கு வெளியே இருந்த வளரும்
நாடுகளுக்கு சலுகைகள் வழங்கி, அமெரிக்கா குஷிப்படுத்தியது.அந்நாடுகள், ஏற்கனவே பெற்றுக் கொண்டிருந்த வெளிநாட்டு நிதியுதவிகளுடன், இத்தகைய சிறப்பான கூடுதல் கவனிப்புகளும் சேர்ந்தே கிடைத்து வந்தன.
ஏழை
நாடுகளுக்கு செய்யும் தான, தர்மம் இதுவென, அமெரிக்கா கருதியதால்,
அந்த நாடுகளிடமிருந்து பிரதிபலனாக எதையும்
எதிர்பார்க்கவில்லை.
வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகளாக தரம் உயரும்போது, இத்தகைய சலுகைகள், மானியங்கள் படிப்படியாக விலக்கப்பட்டன.கடந்த,
1990ல் இந்த நிலை மாறத் துவங்கியது. ரஷ்யாவுடனான பனிப்போர்
ஒருபக்கம் முடிவுக்கு வந்தது. பல வளரும் நாடுகள் பலம் பெறத்
துவங்கின.
அதில் முக்கியமானது சீனா. அது ஏழை நாடோ, வளரும் நாடோ
அல்ல. வலிமையை உயர்த்திக்கொள்ளத் துவங்கிவிட்ட நாடு.
அமெரிக்காவுக்கே சவால் விடும் வலிமை.
இந்த நிலையில் தான், உருகுவே நாட்டில் நடைபெற்ற காட் மாநாட்டில், பிரச்னை வெடித்தது.
ஏழை நாடுகள் தம்மிடமுள்ள அறிவுசார் சொத்துரிமைகளையும், காப்புரிமைகளையும் அமெரிக்காவோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மாநாட்டில்தான், டபிள்யூ.டி.ஓ., எனப்படும், உலக வர்த்தக அமைப்பு உருவானது.
அதன்பின், 2000த்திலும், 2010த்திலும், அமெரிக்காவின் பலம் படிப்படியாகத் தேயத் துவங்கியது. அது
கோரிய பல விஷயங்களை, டபிள்யூ.டி.ஓ., தடை செய்யத் துவங்கியது.
ஒருமித்த கருத்து ஏற்பட்டால் தான், எந்த வர்த்தக விதிமுறையையும்
நடைமுறைப்படுத்த முடியும் என்பதால், அந்த அமைப்பின் மீது,
அமெரிக்காவுக்கு கடும் எரிச்சல் ஏற்பட்டது.
குறிப்பாக, வளரும் நாடுகள் என்று சொல்லப்படும், ‘பிரிக்ஸ்’ நாடுகள், டபிள்யூ.டி.ஓ.,வின் விதிமுறைகளைப் பயன்படுத்தி,கொழுத்து விட்டன, வளர்ந்துவிட்டன என்று டிரம்புக்கு செம எரிச்சல்.
இந்தியாவையே எடுத்துக்
கொள்ளுங்களேன். ‘பொருட்களை வாங்கும் சக்தி’ என்ற அளவுகோலில்,
உலகிலேயே மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறோம். இதற்கு
காரணம், ஏற்றுமதித் துறையில் நமக்கு கிடைத்திருக்கும் பல்வேறு
சலுகைகளும், மானியங்களும் தான்.
உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகள், ஒரு சில எல்லைகளை வகுத்திருக்கின்றன.
அதில், ஒரு நாட்டின் தனிநபர் வருவாய், 1,000 டாலருக்குக் கூடுதலாக, தொடர்ச்சியாக மூன்றாண்டுகளுக்கு
மேல் இருந்து, அந்த நாட்டில் ஒரு குறிப்பிட்ட துறையில் செய்யப்படும்
ஏற்றுமதிகள், சர்வதேச ஏற்றுமதிகளில், 3.25 சதவீதத்துக்கும்
மேல் இருக்குமானால், அந்த நாடு, ஏற்றுமதி மானியங்களை
வழங்கக்கூடாது என்பது முக்கியமானது.
இந்த எல்லையை நாம்,
2015லேயே தொட்டுவிட்டோம் என, தெரிவிக்கிறது, சர்வதேச நிதி ஆணையம்.
ஆனாலும், இந்தியா தொடர்ந்து இப்போதும், பல்வேறு துறை
ஏற்றுமதிகளுக்கு மானியங்களையும், சலுகைகளையும் வழங்கிக்கொண்டிருக்கிறது.இந்த
விதி, உலக வர்த்தக அமைப்பில் உருவாக்கப்பட்ட போது, அப்போதே இந்த
எல்லையைக் கடந்த நாடுகளுக்கு, மேலும், 8 ஆண்டுகள் வரை கால அவகாசம் தரப்பட்டது.
அதுபோல், இந்தியாவுக்கும் தர வேண்டும் என, வாதிட்டார், வர்த்தகத்துறை அமைச்சரான சுரேஷ் பிரபு.மருந்து துறை அடுத்த உறுத்தல். அமெரிக்க மருந்து நிறுவனங்களின் ஒரு சில மருந்துகளின் காப்புரிமை காலாவதியாகி விட்டால், அதை
இந்திய நிறுவனங்கள் வேறு விதமாக தயாரித்துக் கொள்ளலாம் என, அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்திய மருந்துகளின் காப்புரிமையை, இதுபோல் நாம் அவர்களுக்கு விட்டுக் கொடுப்பதில்லை.
மூன்றாவது, ஆட்டோமொபைல் துறை. அமெரிக்க சந்தையில், நம் இந்திய கார்களை எந்த
விதமான கூடுதல் வரிகளும் இல்லாமல் விற்பனை செய்கிறோம். ஆனால்,
அங்கேயிருந்து இங்கே வரும், ‘ஹார்லி டேவிட்சன்’ போன்ற இருசக்கர
வாகனங்களுக்கும், வெளிநாட்டு கார்களுக்கும் கூடுதல் வரி
வசூலிக்கப்படுகிறது.
இவை தான், டொனால்டு டிரம்ப் கண்ணை உறுத்துகிறது. வளர்ந்த பின்னரும், இந்தி
யாவும், சீனாவும் இன்னும் ஏற்றுமதிகளுக்கு ஏன் மானியங்களும், சலுகைகளும் வழங்குகின்றன என்பதே அவரது கேள்வி.அவர் வரைக்கும் அவர் கேள்வி சரி. ஆனால்,
இந்தியாவில்
இப்போது தான் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் நிலை
ஏற்பட்டுள்ளது. சலுகைகளும், மானியங்களும் தொடர்ந்தால் தான், இந்த
வளர்ச்சி உறுதிப்படும்; நீடித்திருக்கும்.
தனக்குப் போட்டியாகஇந்தியாவும், சீனாவும் தலையெடுக்கின்றன என்பதால் தான், டபிள்யூ.டி.ஓ.,வை வைத்து, நம்மை மட்டம் தட்டப்பார்க்கிறார் டிரம்ப். அதற்கு இடம் தராமல், நம் வளர்ச்சியை நாம் மேம்படுத்திக் கொள்வதே சரியான அணுகுமுறை.
ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|