பதிவு செய்த நாள்
10 செப்2018
01:21

இந்த ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் விகிதம், 71 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு, ஆகஸ்ட், 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த
ஆண்டு, 5.42 கோடி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு இதே காலத்தில் தாக்கல் செய்யப்பட்டதைவிட, 71 சதவீதம்
அதிகம்.குறித்த காலத்தில் வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால்,
அபராதம் என்ற விதிமுறை அமலுக்கு வந்திருப்பது, இதற்கு முக்கிய
காரணமாக சொல்லப்படுகிறது.
எனினும்,
அரசு தரப்பில், வரித்தாக்கல் உயர்ந்திருப்பதற்கு அபராதம் ஒரு
காரணம் மட்டுமே, பணமதிப்பு நீக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு
அம்சங்கள், இதற்கு காரணமாக
இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமாக முன் வந்து வரித்தாக்கல் செய்யும் விழிப்புணர்வு
அதிகரித்திருப்பதாகவும், அரசு தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|