பதிவு செய்த நாள்
10 செப்2018
01:31

புதிதாக
அறிமுகம் ஆகியுள்ள, ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்’ வங்கி வழங்கும் சேவை
மற்றும் வழக்கமான அஞ்சலக சேமிப்பு கணக்கு சேவை பற்றிய ஒரு ஒப்பீடு.
இந்தியா
போஸ்ட் பேமென்ட் வங்கி, நாடு தழுவிய அளவில் தன் செயல்பாடுகளை
துவங்கிஇருக்கிறது. வங்கிச்சேவையை பரவலாக்கி அனைவருக்கும் சாத்தியமாக்கும் நோக்கத்துடன் ரிசர்வ் வங்கி, புதிய வகை வங்கியான, ‘பேமென்ட்ஸ்’ வங்கிகளுக்கு அனுமதி அளித்தது.
இதன் கீழ் அனுமதி பெற்ற இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி இம்மாத துவக்கத்தில் முழு அளவில் செயல்பட துவங்கியுள்ளது. இந்த வங்கி சேமிப்பு கணக்கு சேவை, பரிவர்த்தனை
வசதிகளை வழங்குவதோடு, வீடு தேடி வரும் வங்கி சேவையையும் அளிக்கிறது.
மூன்று வகை கணக்கு
இந்தியா
பேமென்ட் போஸ்ட் வங்கி மூன்று வகையான சேமிப்பு கணக்கு சேவையை
அளிக்கிறது. வழக்கமான சேமிப்பு கணக்கு மூலம், எந்தவித கட்டணமும் செலுத்தாமல், பணத்தை எடுக்கலாம். இதற்கான
அணுகல் மையங்கள் அல்லது வீடு தேடிய சேவைக்கு விண்ணப்பித்து, இந்த வகை
கணக்கை துவக்கலாம். ‘ஜீரோ பேலன்ஸ்’ கணக்கு என்பதால் குறைந்த பட்ச
தொகையை பராமரிக்க வேண்டாம். காலாண்டு சேமிப்பு கணக்கு அறிக்கை
இலவசமாக அளிக்கப்படும்.
இரண்டாவதாக வழங்கப்படும், டிஜிட்டல் சேமிப்பு கணக்கை, இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி செயலி மூலம் துவக்கலாம். பான்
கார்டு மற்றும் ஆதார் எண் விபரங்களை அளித்து, எளிதாக இந்த சேமிப்பை
கணக்கை துவக்கலாம். எனினும், ஒராண்டுக்குள், கே.ஒய்.சி.,
நடைமுறையை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின், இது வக்கமான கணக்காக மேம்படுத்தப்படும். இவைத்தவிர,
‘பேஸிக் அக்கவுன்ட்’ எனப்படும் அடிப்படை சேமிப்பு கணக்கு சேவையும்
வழங்கப்படுகிறது. வழக்கமான சேமிப்பு கணக்கு அம்சங்கள் கொண்டிருந்தாலும், மாதம் நான்கு முறை மட்டுமே, பணம் எடுக்க முடியும்.
இந்திய அஞ்சலகத்துறை வழங்கும் சேமிப்பு கணக்குடன், பேமென்ட் வங்கி கணக்கு சேவையை இணைத்துக்கொள்ளும் வசதியும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு
இணைக்கப்பட்டால், பேமென்ட் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம்
இருந்தால், எஞ்சிய தொகை அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு மாற்றப்படும்.
நான்கு வகையான சேமிப்பு கணக்குகளுமே, 4 சதவீத வட்டி அளிக்கின்றன.
வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அஞ்சலக சேமிப்பு கணக்கு துவக்க குறைந்தபட்ச டிபாசிட்டாக, 20 ரூபாய் செலுத்த வேண்டும். பேமென்ட் வங்கியில் இதற்கான அவசியம் இல்லை.
பேமெண்ட் வங்கி கணக்கில் அதிகபட்சமாக, ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே கணக்கில் வைத்திருக்கலாம். அஞ்சலக சேமிப்பில் இந்த கட்டுப்பாடு இல்லை. பேமண்ட்
வங்கி கணக்கில், மாதாந்திர குறைந்தபட்ச தொகை வைத்திருக்க வேண்டிய
அவசியம் கிடையாது. அஞ்சலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம், 50
ரூபாய் வைத்திருக்க வேண்டும்.
பணம் எடுக்கும் வசதி
இந்தியா பேமென்ட் வங்கியில் டெபிட் கார்டுக்கு பதில், கியூ.ஆர்., கோடு வசதி கொண்ட கார்டு வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் அல்லது மைக்ரோ, ஏ.டி.எம்., மூலம் இந்த கார்டு சரி பார்க்கப்பட்டு, அஞ்சலக ஊழியர் அல்லது வர்த்தக பிரதிநிதியால் பணம் அளிக்கப்படும்.
அதற்கு
முன், ‘பயோமெட்ரிக்’ முறையால் இரண்டாவது அடுக்கு சரிபார்த்தல்
மேற்கொள்ளப்படும். வீடு தேடி வரும் வங்கிச்சேவையாக இது அமையும்.
இதற்கு கட்டணம் உண்டு. கியூ.ஆர்.,
கோடு கார்டு வசதி மூலம், பில் செலுத்துவது, பணம் அனுப்புவது மற்றும்
ரொக்கமில்லா ஷாப்பிங் போன்ற சேவைகளையும் மேற்கொள்ளலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|