பதிவு செய்த நாள்
12 செப்2018
00:22
புதுடில்லி:பயணியர்
வாகன விற்பனை, 2.46 சதவீதம் அளவுக்கு, ஆகஸ்ட் மாதத்தில் வீழ்ச்சி
அடைந்திருப்பதாக, இந்திய வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு
தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாத வாகன விற்பனை குறித்து, அதன் அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த
ஆகஸ்ட் மாதத்தில், உள்நாட்டு பயணியர் வாகன விற்பனை, 2,87,186 ஆகும்.
இதுவே இதற்கு முந்தைய ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில், 2,94,416 ஆக இருந்தது.கார்
விற்பனையை பொறுத்தவரை, 1.03 சதவீதம் சரிவு கண்டுள்ளது.
நடப்பாண்டு ஆகஸ்டில், 1,96,847 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. இதற்கு
முந்தைய ஆண்டில் இதே மாதத்தில், 1,98,892 கார்கள் விற்பனை ஆகியுள்ளன.
பயணியர்
வாகன விற்பனை, ஜூலை மாதத்திலும், அதற்கு முந்தைய ஆண்டு ஜூலையோடு
ஒப்பிடும்போது, 2.71 சதவீதம் சரிவைக் கண்டது. இப்போது ஆகஸ்டிலும்
சரிவை சந்தித்துள்ளது.மழை பாதிப்பு மட்டுமின்றி, எரிபொருள் விலை அதிகரிப்பும் விற்பனையை பாதித்துள்ளது.
இருப்பினும்,
மோட்டார் சைக்கிள் விற்பனை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன்
ஒப்பிடுகையில், 6.18 அதிகரித்துள்ளது. ஸ்கூட்டர் உள்ளிட்ட மொத்த
இருசக்கர வாகன விற்பனை, ஆகஸ்ட் மாதத்தில் 2.91 சதவீதம்
அதிகரித்துள்ளது.வர்த்தக வாகனங்களை பொறுத்தவரை, நடப்பு
நிதியாண்டில், 10 --– 12 சதவீதம் வளர்ச்சி இருக்கும் என,
கூட்டமைப்பு கணித்திருந்தது. இருப்பினும், ஏப்ரல் முதல் ஆகஸ்ட்
வரையிலான காலகட்டத்தில், 4.67 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி
கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|