பதிவு செய்த நாள்
13 செப்2018
00:16
தேனி:தேனி பழக் கடைகளில், துரியன் பழத்தின் விலை கிலோ, 1,100 ரூபாயாக உள்ளது.
துரியன்
பழம் நீலகிரியில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. பழத்தை
உடைக்காமல் ஒரு மாதம் வரை வைத்திருந்தாலும் அழுகாமல் இருக்கும். உடைத்தால் சில மணி நேரத்தில்
தின்றுவிட வேண்டும்.
தேனி பழக்கடை உரிமையாளர், தங்கேஸ்வரன் கூறியதாவது:
வைட்டமின், ‘சி’ நிறைந்த துரியன் பழம், தைராய்டு, குறைந்த ரத்த அழுத்தம், ரத்த சோகை உள்ளிட்ட நோயாளிகளுக்கு உகந்ததாக இருக்கிறது. இதனால், பலரும் விரும்பி வாங்கி செல்கின்றனர். முன்பு, சீசனில் மட்டுமே இப்பழம் கிடைத்தது. தற்போது, ஆண்டு முழுவதும் கிடைக்கிறது; வரத்தும் ஒரே சீராக உள்ளது. விலை ஓராண்டாக கிலோ, 1,000 – 1,100 ரூபாயாக உள்ளது. வரத்து குறைந்தால், 2,000 ரூபாய் வரைக்கும் உயரும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|