பதிவு செய்த நாள்
13 செப்2018
00:22
புதுடில்லி:கடந்த, 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு, ஆகஸ்டில், நாட்டின் சில்லரை பணவீக்கம், 3.69 சதவீதமாக சரிவடைந்துஉள்ளது. இது, ஜூலையில், 4.17 சதவீதமாக இருந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில், சில்லரை பணவீக்கம், 3.28 சதவீதமாக காணப்பட்டது.காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றின் விலை குறைவால், சில்லரை பணவீக்கம் சரிவடைந்துள்ளது.
சில்லரை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின், 4 சதவீத இலக்கை விட குறைவாக உள்ளது. அதனால், ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக் கொள்கை கூட்டத்தில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி மீண்டும் உயர்த்தப்பட மாட்டாது என, எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் துறை உற்பத்தி: நாட்டின் தொழில் துறை உற்பத்தி, கடந்த ஜூலை மாதம், 6.6 சதவீதமாக குறைந்துள்ளது. இது, ஜூன் மாதத்தில், 7 சதவீதமாக இருந்தது.இதே காலத்தில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 7.6 சதவீதத்தில் இருந்து, 6.6 சதவீதமாக குறைந்துள்ளது.
சுரங்கத் துறையில், நிலக்கரி தவிர்த்து இதர பிரிவுகளின் வளர்ச்சி குறைந்துள்ளது. அதேசமயம், தயாரிப்பு சார்ந்த துறைகளின் வளர்ச்சி நன்கு இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|