lநாட்டின் ஏற்றுமதியும், இறக்குமதியும் அதிகரிப்பு lநாட்டின் ஏற்றுமதியும், இறக்குமதியும் அதிகரிப்பு ... முட்டை விலை  360 காசுகள் முட்டை விலை 360 காசுகள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கணினி தொழில்நுட்பத்தை நம்பி கடன் தர வேண்டாம் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2018
00:32

மும்பை:‘‘வங்­கி­கள், கடன் வழங்­கு­வ­தில் முழுக்க முழுக்க, கணினி தொழில்­நுட்­பத்தை மட்­டும் சார்ந்­தி­ருக்­கா­மல், மனித உழைப்­பை­யும் பயன்­படுத்த வேண்­டும்,’’ என, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி எச்­ச­ரித்­துள்­ளது


மும்­பை­யில், பேங்க் பஜார் நிறு­வ­னத்­தின் கருத்­த­ரங்­கில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்­கி­யின் செயல்
இயக்­கு­னர், அனுப் பக்சி பேசி­ய­தா­வது:வங்­கி­கள், ‘சிபில்’ எனப்­படும், கடன் தகுதி மதிப்­பீட்டு அறிக்கை அடிப்­ப­டை­யில் கடன் வழங்­கு­கின்­றன.தற்­போது, ரிசர்வ் வங்கி அனு­மதி பெற்று பல
நிறு­வ­னங்­கள், நிதிச் சேவை­களை வழங்­கத் துவங்­கி­யுள்­ளன.


கணினி மோசடி


இது போன்ற நிறு­வ­னங்­கள், ஒரு­வ­ரின் கடன் தகு­தியை விரைந்து பரி­சீ­லித்து, அவ­ருக்கு கடன் வழங்­க­லாமா, வேண்­டாமா என்­பதை முடிவு செய்­கின்­றன.இந்­நி­று­வ­னங்­கள், கடன் கோரு­வோர் குறித்த மதிப்­பீட்டை, சிபில் அறிக்கை மற்­றும் இதர வலை­தள விப­ரங்­களை பார்த்து, கடன் வழங்­கு­கின்­றன.


இத்­த­கைய வலை­தள ஆவ­ணங்­க­ளு­டன், மனித உழைப்­பை­யும் பயன்­படுத்தி, கடன் கோரு­ப­வர் தொடர்­பான விப­ரங்­கள் சரி­யா­ன­வையா என்­பதை அறி­வது அவ­சி­யம்.தற்­போது, கணினி ஒருங்­கி­ணைப்­பிற்­குள் புகுந்து, தக­வல்­களை திரு­டு­வது மற்­றும் பண மோச­டி­யில் ஈடு­படும்
சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துஉள்­ளன.


அத­னால், ஒரு­வ­ரின் கடன் தகு­தியை உட­ன­டி­யாக அறிய, சிபில் அறிக்கை மற்­றும் சமூக வலை­த­ளங்­கள் உத­வியை மட்­டும் நாடு­வது சரி­யாக இருக்­காது. இந்த ஆய்­வில், நிதி நிறு­வ­னங்­கள் எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்க வேண்­டும்.


மின்னணு ஆவணம்


சிபில் அறிக்கை மட்­டு­மின்றி, ஒரு­வர் சமூக வலை­த­ளங்­களில் வெளி­யி­டும் தன்­வி­ப­ரக் குறிப்­பு­க­ளி­லும், கடன் பெறும் நோக்­கத்­து­டன், தில்­லு­முல்லு செய்ய வாய்ப்­புள்­ளது.
அத­னால், கணினி தொழில்­நுட்­பத்­தில் உரு­வாக்­கப்­படும் தக­வல்­களை சரி­பார்ப்­ப­து­டன், பிற
வழி­க­ளி­லும், கட­னுக்கு விண்­ணப்­பித்­தோ­ரின் தகு­தியை ஆராய வேண்­டும்.வங்­கி­களும், நிதி
நிறு­வ­னங்­களும், இதர ஆவ­ணங்­க­ளு­டன், ஒரு­வர் தாக்­கல் செய்த வரு­மான வரி கணக்­கை­யும், ஆய்வு செய்­கின்­றன.


கட­னுக்கு பிணை­யாக வழங்­கும் பங்­கு­கள், தற்­போது மின்­னணு ஆவண வடி­வில், ‘டீமேட்’ கணக்­கில் பரா­ம­ரிக்­கப்­ப­டு­கின்­றன. அது­போல, கடன் பத்­தி­ரங்­கள், மியூச்­சு­வல்
பண்டு முத­லீ­டு­கள் ஆகி­ய­வற்­றை­யும், மின்­னணு ஆவ­ணங்­க­ளாக பாது­காக்கும் வசதி உள்­ளது.அத­னால், கடன் அளிக்­கும் போது, இத்­த­கைய மின்­னணு பிணைப் பத்­தி­ரங்­களை பெரி­தும் சார்ந்­து இ­ருக்­கும் நிலை உள்­ளது.


இருந்­த­போ­தி­லும், கடன் கொடுப்­ப­தில், அனைத்து அம்­சங்­க­ளை­யும் சீர்­துாக்கி பார்க்­கும் அதி­கா­ரி­க­ளின் பங்­க­ளிப்­புக்கு, அதிக முக்­கி­யத்­து­வம் அளிக்க வேண்­டும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

பல மாநி­லங்­கள், நில விப­ரங்­களை, மின்­னணு வடி­விற்கு மாற்றி வரு­கின்­றன.
இணை­யம் மூலம் பத்­தி­ரப் பதிவு, பட்டா மாற்­றம் மேற்­கொள்­ளும்
வச­தி­கள் அறி­மு­க­மா­கி­யுள்­ளன. இத­னால், நிதி நிறு­வ­னங்­கள், ஒரு­வ­ரின் தகு­தியை சுல­ப­மாக சீர்­துாக்கி பார்த்து, கடன் வழங்க முடி­யும்.
– அனுப் பக்சி, செயல் இயக்குனர், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)