பதிவு செய்த நாள்
15 செப்2018
00:03
புதுடில்லி:உலகளவில், குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இது குறித்து, ‘கிரெடிட் சூசி’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:உலகிலேயே, சீனாவில் தான், குடும்ப நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இங்கு, 159 நிறுவனங்கள், குடும்பத்தினரால் வழி வழியாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.அடுத்த இடத்தில், 121 நிறுவனங்களுடன் அமெரிக்கா உள்ளது. இந்தியா, 83,900 கோடி டாலர் சந்தை மூலதனத்தில் இயங்கும், 111 நிறுவனங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
ஜப்பான் ஆசிய பிராந்தியம் நீங்கலான நாடுகளில், சீனா, இந்தியா, ஹாங்காங் ஆகியவை, முதல் மூன்று இடங்களில் உள்ளன.நான்காம் இடத்தில் உள்ள தென் கொரியாவில், 43 குடும்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன. அடுத்த இடங்களில் உள்ள இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில், தலா, 26 குடும்ப நிறுவனங்கள் உள்ளன.
கடந்த, 2006 முதல், இந்தியாவில், குடும்ப நிறுவனங்களின் பங்கு முதலீடு மீதான ஆண்டு சராசரி வருவாய், 13.9 சதவீதமாக உள்ளது. இது, குடும்ப உரிமையாளர்கள் இல்லாத நிறுவனங்களின், 6 சதவீத ஆண்டு சராசரி பங்கு முதலீட்டு வருவாயை விட அதிகம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|