பதிவு செய்த நாள்
16 செப்2018
00:56

புதுடில்லி:‘இணைய பயன்பாடு வேகமாக உயர்ந்து வருவதால், இந்தாண்டு, மின்னணு வர்த்தகம், 2.37 லட்சம் கோடி ரூபாயாக உயரும்’ என, இணையம் மற்றும் மொபைல் போன் கூட்டமைப்பான, ஐ.ஏ.எம்.ஏ.ஐ., மதிப்பிட்டுள்ளது.
இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள், கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் இணைய வசதிகள் போன்றவற்றால், மின்னணு வர்த்தகம் சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது.நகர்ப்புறங்களை பொறுத்தவரை, 2017 டிச., நிலவரப்படி, 29.50 கோடி பேர், இணையம் பயன்படுத்துகின்றனர்.பயணம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு, இணையம் வழியாக பணம் செலுத்துவது அதிகரித்துள்ளது.இதனால், மின்னணு வர்த்தகம், 2011 டிச., – 2017 டிச., வரை, ஆண்டுக்கு, 34 சதவீத சராசரி வளர்ச்சியுடன், 2.04 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, இந்தாண்டு, டிசம்பர் இறுதியில், 2.37 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும்என, மதிப்பிடப்பட்டு உள்ளது.மின்னணு வர்த்தகத்தில், பயணப் பிரிவு, 54 சதவீத பங்களிப்புடன், 1.10 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்துடன், முதலிடம்பிடித்துள்ளது.சில்லரை விற்பனை பிரிவின் வர்த்தகம், 73 ஆயிரத்து, 845 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.அடுத்த இடத்தில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பிரிவு உள்ளது. திருமணம் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு, அடுத்த இடத்தை பிடித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|