பதிவு செய்த நாள்
16 செப்2018
23:57

முதலீட்டாளர்கள், நிதி தொடர்பான அடிப்படையான அம்சங்களை அறிந்திருப்பது அவசியம். மேலும், முதலீடு தொடர்பான அடிப்படை பாடங்களையும் அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில், செஸ் விளையாட்டிற்கும், நிதிக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக, ‘மிண்ட்’ இதழ் பேட்டியில் சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் அண்மையில் கூறியுள்ளார். சதுரங்க ராஜா அளிக்கும் நிதி பாடங்கள்:
ஆலோசனை தேவை :
சதுரங்கத்தில் ஆனந்த் உலக சாம்பியனாக இருக்கிறார். அவருக்கு வழிகாட்டிகள் பலர் இருக்கின்றனர். சதுரங்க விளையாட்டில் நான் தவறவிடுபவற்றை, பயிற்சி வழிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றனர் என்கிறார். அதே போல நிதி விஷயத்திலும், தொழில்முறை ஆலோசனை வழங்கும் வழிகாட்டிகளை நாடுவது பலனுள்ளதாக இருக்கும்.
பரவலாக்கம் அவசியம் :
முதலீட்டில், பரவலாக்கம் மிகவும் அவசியம். சம்பங்கு மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வருவாய் தரும் சாதனங்களில் அதிகம் முதலீடு செய்வதாக கூறுகிறார். பல வகையான முதலீட்டு வாய்ப்புகளை நாடுவது பரவலாக்கத்திற்கு வழி வகுக்கும். மியூச்சுவல் பண்ட்கள் வழியே சம்பங்கு முதலீட்டை மேற்கொள்வதாக, அவர் கூறுகிறார்.
தெளிவான, ‘ரிஸ்க்’ :
நீண்ட கால முதலீட்டிற்கு சமபங்குகள் அவசியம் என, அவர் உணார்ந்திருக்கிறார். பணவீக்கத்தை சமாளிக்க சமபங்குகளே ஏற்றவை என்கிறார். சம்பங்குகள் எனும் போது, ‘ரிஸ்க்’ இருக்கும். ரிஸ்கிற்கு ஏற்ற பாதுகாப்பு இருக்க வேண்டும். ரிஸ்க் – பரிசு விகிதத்தை புரிந்து முதலீடு செய்ய வேண்டும். கணக்கிடப்பட்ட ரிஸ்கை எடுப்பது அதற்கேற்ற பலன் தரும்.
இலக்கு முக்கியம் :
பொதுவாக பலரும் அதிக பலன் தரும் முதலீடு அல்லது சரியான முதலீட்டு வாய்ப்பை நாடுகின்றனர். ஆனால், இதைவிட, முதலீட்டு உத்தி உங்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்கிறார் ஆனந்த். நிதி இலக்குகளுக்கு ஏற்ப அவை அமைய வேண்டும். பணம் இலக்கு அல்ல, வாழ்க்கையில் நீங்கள் செய்ய விரும்புகின்றவை தான் முக்கியம்.
பொறுப்பேற்பு தேவை :
பெரும்பாலான குடும்பங்களில் கணவன், மனைவியில் யாராவது ஒருவர் தான் நிதி விஷயங்களுக்கு பொறுப்பேற்கின்றனர். ஆனால் இருவருமே பொறுப்பை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறார், ஆனந்த். நிதி விஷயங்களை ஒன்றாக பேசி, எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்கிறோம் என்கிறார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|