வாராக் கடன் வசூல் இலக்கு ரூ.1.50 லட்சம் கோடிவாராக் கடன் வசூல் இலக்கு ரூ.1.50 லட்சம் கோடி ... டாலர் ஓடி வருமா? டாலர் ஓடி வருமா? ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தை : இழந்த வாய்ப்­பு­கள் மீண்­டும் வராது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2018
00:14

பொது­வாக, பொரு­ளா­தார சூழல்­கள் தொடர்ந்து மாற்­றங்­களை சந்­திப்­பது என்­பது இயல்பு. அப்­படி ஏற்­படும் மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப, முத­லீட்­டா­ளர்­கள் தங்­க­ளு­டைய முத­லீட்டு அணு­கு­மு­றை­களை மாற்றி அமைத்­துக் கொள்ள வேண்­டி­யது அவ­சி­யம். டால­ருக்கு நிக­ரான ரூபா­யின் மதிப்பு, அர­சின் நிதிப் பற்­றாக்­குறை மாற்­றங்­கள், ஏற்­று­ம­திக்­கும், இறக்­கு­ம­திக்­கும் உள்ள இடை­வெளி ஆகி­யவை தொடர்­பான குறி­யீ­டு­கள், மிக­வும் முக்­கி­ய­மா­னவை.

பங்­குச் சந்தை முத­லீ­டு­க­ளுக்­கும், இந்த குறி­யீ­டு­க­ளுக்­கும் ஆழ்ந்த தொடர்பு உள்­ளது. ஆனால், இந்த தொடர்பு பல­ருக்­கும் முக்­கி­ய­மா­ன­தாக படு­வ­தில்லை. அதற்கு உரிய முக்­கி­யத்­து­வம் கொடுக்­கா­த­தால், பல முத­லீட்டு தவ­று­கள் ஏற்­ப­டு­கின்றன. இந்த அடிப்­படை தவறு, நீண்ட முத­லீட்டு தவ­று­க­ளுக்கு வித்­தி­டும். அத்­த­கைய தவ­று­கள் நடக்­காத வண்­ணம் பார்த்­துக் கொள்ள வேண்­டிய நேரம் இது. ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ரும், தங்­க­ளு­டைய முத­லீ­டு­களை இப்­போது, மறு ஆய்­வுக்கு உட்­படுத்த வேண்­டும். உரு­வா­கும் சூழ­லுக்கு ஏற்ப, அவற்றை மாற்றி அமைத்­துக் கொள்ள வேண்­டும்.

ரூபாய் மதிப்பு, கச்சா எண்­ணெய், நிதிப் பற்­றாக்­குறை மற்­றும் வட்டி விகி­தம் ஆகி­ய­வற்­றில் ஏற்­படும் அதி­வேக மாற்­றங்­கள், ஒவ்­வொரு நிறு­வ­னத்­தை­யும் எந்த வகை­யில் பாதிக்­கும் என்­பதை, ஆய்­வின் நோக்­க­மாக வைத்­துக் கொள்ள வேண்­டும். அப்­படி செய்­யப்­படும் ஆய்­வு­கள், முத­லீட்டு மாற்­றங்­களின் தேவை­களை நமக்கு உணர்த்­தும். அந்த தேவை­களை நிறைவு செய்­யும் பொறுப்பு, ஒவ்­வொரு முத­லீட்­டா­ள­ருக்­கும் இருக்­கிறது. தொடர்ந்து எடுக்­கப்­படும் முடி­வு­கள் மூல­மாக, தேவை­யான முத­லீட்டு மாற்­றங்­களை நாம் ஏற்­ப­டுத்­திக் கொள்ள வேண்டும்.

நம் அரசு, ரூபாய் மதிப்பு சரிவை தடுக்­கும் நோக்­கோடு தற்­போது களம் இறங்கி உள்­ளது. வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­க­ளி­டம் இருந்து, டாலரை திரட்ட, திட்­டங்­கள் தீட்­டப்­ப­டு­கின்றன. வட்டி விகி­த­மும் உறு­தி­யாக கூடும் என்றே தோன்­று­கிறது. மேலும், இந்­திய உற்­பத்தி நிறு­வ­னங்­கள், வெளி­நாட்­டில் இருந்து நேர­டி­யாக கடன் பெற அனு­மதி வழங்­கப்­பட உள்­ளது.இந்த முடி­வு­கள், பல நிறு­வ­னங்­க­ளுக்கு நன்­மையை விளை­விக்­கும். ரூபா­யின் மதிப்பு, ஒரு புதிய இடத்­தில் நிலைப்­ப­டுத்­தப்­படும் என்­றும் எதிர்­பார்க்­க­லாம்.

ரூபா­யின் இந்த புதிய மதிப்பு, இறக்­கு­மதி சார்ந்த பல நிறு­வ­னங்­களை பாதிக்­கக் கூடும். அவற்­றின் செல­வு­கள் கூட­லாம். அதிக கடன் வைத்­தி­ருக்­கும் நிறு­வ­னங்­களும் பாதிக்­கப்­படும். எகி­றும் வட்டி விகி­தங்­கள் அவற்றை அவ­சி­யம் பாதிக்­கும். மாறாக, கட­னற்று இயங்கும் ஏற்­று­மதி தொழில்­ கள், செழிப்­பான காலங்­களை சந்­திக்க நேரி­டும். அவர்­களின் லாப வளர்ச்சி மீண்­டும் முத­லீட்­டா­ளர் கவ­னத்தை ஈர்க்­கும். இறக்­கு­மதி தடுப்பு நட­வ­டிக்­கை­களும், பல இந்­திய உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளுக்கு பலன் தரும் என்­பது தெளி­வா­கத் தெரி­கிறது.

இந்த ஆண்­டில், பல பொரு­ளா­தார நிகழ்­வு­க­ளை­யும், மாற்­றங்­க­ளை­யும் முத­லீட்­டா­ளர்­கள் சந்­திப்­பது உறுதி. இவற்றை நிதா­ன­மாக எதிர்­கொள்­வது அவ­சி­யம். முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் இவற்றை அணு­கும் முத­லீட்­டா­ளர்­கள், வருங்­கால வெற்றி நோக்கி பய­ணிப்­பர். முத­லீட்டு முடி­வு­களை, வருங்­கா­லம் சார்ந்து எடுத்­த­தன் பலன்­கள், அவர்­க­ளுக்கு பெரி­தும் சாத­க­மாக நிற்­கும்.ஆனால், தற்­கால சிந்­த­னை­களில் மூழ்கி, சிக்கி இருக்­கும் முத­லீட்­டா­ளர்­கள், எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் மற்­றும் முடி­வு­கள் எடுப்­பதை கோட்டை விட்டு விடக்­கூ­டும். இழந்த வாய்ப்­பு­கள், அவர்­க­ளுக்கு மீண்­டும் திரும்­பாது.

ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)