வாராக் கடன் வசூல் இலக்கு ரூ.1.50 லட்சம் கோடிவாராக் கடன் வசூல் இலக்கு ரூ.1.50 லட்சம் கோடி ... ‘சென்செக்ஸ்’ வீழ்ச்சி ரூ.1 லட்சம் கோடி மாயம் ‘சென்செக்ஸ்’ வீழ்ச்சி ரூ.1 லட்சம் கோடி மாயம் ...
டாலர் ஓடி வருமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2018
00:17

டால­ருக்கு நிக­ரான ரூபா­யின் மதிப்பு வீழ்ச்­சி­யைத் தடுத்து நிறுத்­தும் நட­வ­டிக்­கை­களை, மத்­திய அரசு மேற்­கொண்­டுள்­ளது. இது தொடர்­பாக, பிர­த­மர் மோடி தலை­மை­யில் நடை­பெற்ற கலந்­தா­லோ­ச­னை­களின் ஒரு பகு­தி­யாக, நிதி அமைச்­சர் அருண் ஜெட்லி, ஐந்து அம்ச செயல்­திட்­டம் ஒன்றை அறி­வித்­தார். தற்­போது, அரசு எடுத்து வரும் இத்­த­கைய முயற்­சி­க­ளுக்கு பலன் எப்­படி இருக்­கும்? இவை போது­மா­ன­வையா?

இன்­றைய நிலை­யில், இந்­தி­யா­வில் டால­ருக்­கான தேவை, மிக­வும் அதி­க­மா­கி­விட்­டது. ஆனால், அதற்­கான சப்­ளையோ குறைவு. அமெ­ரிக்­கப் பொரு­ளா­தார வளர்ச்­சி­யும், சீனா­வோடு அமெ­ரிக்கா மேற்­கொண்டு வரும் வர்த்­த­கப் போரும், இதற்­கான முக்­கிய கார­ணங்­கள். அதே­போல், நம்­ உள்­நாட்டு கார­ணங்­களில் முக்­கி­ய­மா­னது, நடப்பு கணக்­குப் பற்­றாக்­குறை. அதா­வது, ஏற்­று­மதி குறைவு, இறக்­கு­ம­தியோ அதி­கம். இந்­நி­லை­யில், நாம் வெளி­நா­டு­க­ளுக்­குச் செலுத்த வேண்­டிய தொகை கூடிக்­கொண்டே போய்­விட்­டது.

சமீ­பத்­தில், 2018 -– 19ம் நிதி­யாண்­டின் முதல் காலாண்­டில், நம் நடப்பு கணக்­குப் பற்­றாக்­குறை, மொத்த, ஜி.டி.பி.,யோடு ஒப்­பி­டும் போது, 2.4 சத­வீ­த­மாக உயர்ந்­து­விட்­டது. இதற்கு முந்­தைய காலாண்­டில் இது, 1.9 சத­வீ­த­மாக இருந்­தது. இவை­யெல்­லாம் சேர்ந்தே, நம் ரூபா­யின் மதிப்பு சரி­வுக்­குக் கார­ணங்­க­ளா­கி­யுள்ளன. டால­ருக்கு நிக­ரான ரூபா­யின் மதிப்பு, 72 ரூபாய்க்கு மேல் சென்­ற­போது, பொரு­ளா­தார நிபு­ணர்­கள் எச்­ச­ரிக்­கத் துவங்­கி­னர்.

மத்­திய அர­சும், ரிசர்வ் வங்­கி­யும் தலை­யிட்டு, இந்­நி­லையை சீர் செய்ய வேண்­டும், எனக் கோரி­னர். அதன் தொடர்ச்­சி­யாக, பிர­த­மர் தலை­மை­யில் கலந்­தா­லோ­சனை கூட்­டங்­கள் நடை­பெற்­றன. இதன் பின்­ன­ணி­யில், ஐந்து அம்ச செயல்­திட்­டத்தை, நிதி அமைச்­சர், அருண் ஜெட்லி வெளி­யிட்­டார். ‘இப்­படி ஒரு கூட்­டம் நடை­பெற இருக்­கிறது’ என்ற செய்தி வெளி­யா­ன­வு­ட­னேயே, வெள்­ளிக்­கி­ழமை மாலை, ரூபாய் மதிப்பு சற்று தலை­நி­மி­ரத் துவங்­கி­யது, கவனிக்­கத்­தக்­கது. அரசு, நிலை­மையை கவ­னித்­துக் கொண்டு தான் இருக்­கிறது. நட­வ­டிக்கை எடுக்­கத் தயங்­காது என்ற செய்­தியே, சந்­தைக்­குப் பெரும் தெம்­பைக் கொடுத்­தது.

மேலும், சில நாட்­களாக, மத்­திய அரசு, செலா­வணி சந்­தை­யில் தலை­யிட்டு, அவ்­வப்­போது, டாலர்­களை வாங்­கி­ய­தும், சந்­தைக்கு நம்­பிக்­கை­யூட்­டு­வ­தாக இருந்­தது. நிதி அமைச்­சர், அருண் ஜெட்லி தெரி­வித்­துள்ள நட­வ­டிக்­கை­களை, இப்­படிப் பிரித்து புரிந்து கொள்­ள­லாம். அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பொருட்­களின் இறக்­கு­மதி­யைக் கட்­டுப்­ப­டுத்­து­தல். எவை­யெல்­லாம் அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பொருட்­கள் என்­ப­தற்­கான ஒரு பட்­டி­யல், அனைத்து துறை­க­ளோ­டும் சேர்ந்து தயா­ரிக்­கப்­படும் என்­றும், அதன் பின் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதே போல், ஏற்று­ மதிக்கு அதி­கம் வாய்ப்பு உள்ள­வற்­றை­யும் கண் டறிந்து ஊக்­க­ம­ளிப்­பது.

வெளி­நா­டு­களில் இருந்து டாலர் முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தில் உள்ள சிக்­கல்­கள் நீக்­கப்­பட்­டுள்ளன. கடன் பத்­தி­ரங்­களை வெளி­யி­டு­வ­தில் உள்ள வட்டி சுமை­களும் எளிதாக்­கப்­பட்­டுள்ளன. பெரு­நி­று­வ­னங்­களின் கடன் பத்­தி­ரங்­களை வாங்­கு­வ­தற்கு இருந்த கட்­டுப்­பா­டு­களும் தளர்த்­தப்­பட்டுள்ளன. உள்­நாட்டு வங்­கி­களில் இருந்து கடன் பெற முடி­யாத நிறு­வ­னங்­கள், வெளி­நா­டு­களில் இருந்து கடன்­களை பெறு­வ­தற்கு இருந்த கட்­டுப்­பா­டு­களும் எளி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளன. இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் மூல­மாக, 8 முதல், 10 பில்­லி­யன் டாலர்­கள் (அதி­க­பட்­சம், 57 ஆயி­ரம் கோடி ரூபாய்) வரை இந்­தி­யா­வுக்­குள் வரும் என, மத்­திய அரசு நம்­பு­கிறது.

இதன் மூலம், நம் டாலர் தேவை, ஓர­ள­வுக்கு பூர்த்­தி­யா­கும். ரூபா­யின் மதிப்பு படிப்­ப­டி­யாக தலை­நி­மிரும். இந்­நி­லை­யில், பல்­வேறு முத­லீட்டு ஆலோ­சனை நிறு­வ­னங்­கள் ஒரு­பக்­கம் நம்­பிக்­கை­யை­யும், மறு­பக்­கம் சந்­தே­கங்­க­ளை­யும் எழுப்­பி­யுள்ளன. இந்த நட­வ­டிக்­கை­க­ளால், உட­ன­டி­யாக டாலர்­கள் வந்து கொட்ட வாய்ப்­பில்லை என்­பது முதல் விமர்­ச­னம். அரசு இது­வரை இருந்த பல்­வேறு கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­யுள்­ளது வர­வேற்­கத்­தக்­கது. ஆனால், எங்கே வரு­வாய் அதி­கம் என்­பதை, வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள் பார்க்­கவே செய்­வர்.

அமெ­ரிக்­கா­வில் தற்­சமயம் ஏற்­பட்­டுள்ள முன்­னேற்­றத்­தால், அவர்­க­ளு­டைய முத­லீ­டு­க­ளுக்கு அங்­கேயே போதிய வரு­வாய் கிடைத்து வரு­கிறது. இந்­தி­யா­வில் முத­லீடு செய்­வ­தன் மூலம் கிடைத்து வந்த வரு­வா­யோடு ஒப்­பி­டும்­போது, அமெ­ரிக்க வரு­வாய் சற்று குறைவு தான். ஆனா­லும், அது நிலை­யா­ன­தாக, ஏற்­றத்­தாழ்­வு­கள் அற்­ற­தாக இருக்­கிறது.

ஆனால், இந்­தி­யாவோ, தொடர்ச்­சி­யாக நடப்பு கணக்­குப் பற்­றாக்­குறை, பண­வீக்­கம் ஆகி­ய­வற்­றால் தளர்­வுற்று இருக்­கும்­போது, இங்கே போதிய வரு­வாய் ஈட்ட முடி­யாத நிலை. அத­னால், அன்­னிய முத­லீட்­டா­ளர்­கள் இங்கே வந்து டாலர்­க­ளைக் கொட்­டு­வ­தற்­கான போதிய கவர்ச்சி, அர­சின் திட்­டங்­களில் இல்லை என்ற விமர்­ச­னம் வைக்­கப்­ப­டு­கிறது. இரண்­டா­வது, அத்­தி­யா­வ­சி­ய­மற்ற பொருட்­களின் இறக்­கு­ம­தி­யைக் கட்­டுப்­ப­டுத்­து­வது. பெட்­ரோ­லி­யப் பொருட்­க­ளைத் தவிர, மற்ற அனைத்­தை­யுமே இந்த வரை­ய­றைக்­குள் கொண்டு வந்து விட­லாம். இதில் பெரும் பாதிப்பை அடை­யப்­போ­வது தங்­கம், பல்­வேறு இயந்­தி­ரங்­களின் உதிரி பாகங்­கள், மின்­னணு சாத­னங்­கள் ஆகி­யவை தான்.

இறக்­கு­மதி மீதான தீர்­வை­களை சற்று அதி­கப்­ப­டுத்­தி­னால், இப்­பொ­ருட்­களின் இறக்­கு­ம­தி­யில் சற்று தொய்வு ஏற்­படும், இதனால், உள்­நாட்­டில் இருந்து டாலர் வெளி­நாடு போவது சற்று குறைய வாய்ப்­புண்டு. அப்­போ­தும், கூடு­தல் விலை கொடுத்து வாங்க முன்­ வரு­ப­வர்­கள் இருப்­பர். ‘அவர்­க­ளுக்­குச் சேவை செய்ய அனு­மதி வழங்க வேண்­டும்’ என்ற வாதம் முன்­வைக்­கப்­ப­டு­கிறது. எந்­தப் பொருட்­கள் எல்­லாம் இந்­தப் பட்­டி­ய­லில் இடம்­பெ­றப் போகின்றன என்­பது, இனி­மேல் தான் தெரி­ய­வ­ரும். இங்கே இறக்­கு­மதி செய்­ப­வர்­களின் தொழில் பாதிக்­கா­மல், கத்தி மேல் நடப்­பது போன்ற ஒரு பட்­டி­யலே தயா­ரா­கும் என்­பதே எதிர்­பார்ப்பு. இந்த ஐந்து அம்ச செயல்­திட்­டத்தை இப்­படிப் புரிந்து­கொள்­ள­லாம். டாலர் முத­லீ­டு­கள் வர வேண்­டிய சாலை­யில் உள்ள குண்டு குழி­க­ளைச் செப்­ப­னிட்டு, தார் பூசி மேம்­ப­டுத்தி இருக்­கி­றோம்.

அதில், நாளைக்கே டாலர்­கள் உருண்டு ஓடி­வ­ரும் என்­ப­தற்கு உத்­த­ர­வா­த­மில்லை. ஆனால், இந்த வழி­யில் உள்ள தடை­களால் சற்று பின்­வாங்­கிய வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள், இனி­மேல் துணிச்­ச­லோடு பய­ணம் செய்ய முன்­வ­ரு­வர். எந்த செயல்­திட்­ட­மும் வாய் பேச்­சிலோ, காகி­தத்­திலோ இருந்து பலன் இல்லை. அதை விரைந்து நடை­மு­றைப்­ப­டுத்­தும் போது தான், சாதக பாத­கங்­கள் தெரி­ய­வ­ரும். போது­மான டாலர், இந்­தி­யச் சந்­தைக்­குள் ஓடி­வ­ரத் துவங்­கி­னால் தான், அர­சின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஆத­ர­வும், அங்­கீ­கா­ர­மும் கிடைத்­த­தாக பொருள். திங்­கட்­கி­ழமை சந்தை, இதற்­குச் சாத­க­மான பதிலை வைத்­துக் காத்­தி­ருக்­கும் என்று நம்­பு­வோம்!

–ஆர்.வெங்­க­டேஷ், பத்திரிகையாளர்

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களில், சரக்கு போக்குவரத்து மேற்கொள்வதற்கான ... மேலும்
business news
புதுடில்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், இன்று, தொழில் அமைப்புகளை சார்ந்தவர்களை சந்தித்து, அவர்களது ... மேலும்
business news
புதுடில்லி : ‘நிதி நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது’ என, ‘ஜெட் ஏர்வேஸ்’ ... மேலும்
business news
பெங்களூரு : கடந்த, 2017 – -18ம் நிதியாண்டில், ஆயுள் காப்பீடு துறையின் பிரிமியம் வருவாய், 4.60 லட்சம் கோடி ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)