பதிவு செய்த நாள்
17 செப்2018
23:23

புதுடில்லி: மத்திய அரசு, நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், நேரடி வரிகள் மூலம், 11.50 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்க, இலக்கு நிர்ணயித்துள்ளது.
அரசுக்கு நேரடியாக செலுத்தப்படும், வருமான வரி, செல்வ வரி, மாநகராட்சி வரி உள்ளிட்டவை, நேரடி வரிகள் பிரிவில் அடங்கும். ‘‘மத்திய அரசு, கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில், நேரடி வரி வசூல் இலக்கை, 14.3 சதவீதம் உயர்த்தி, 11.50 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது,’’ என, மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர், சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: மத்திய அரசின் நேரடி வரி வசூல், 2016 – -17ம் நிதியாண்டை விட, 2017 -– 18ம் நிதியாண்டில், 18 சதவீதம் உயர்ந்து, 10.03 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. நடப்பு நிதியாண்டில், நேரடி வரி வசூல் மேலும் அதிகரித்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விஞ்சும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டு, ஏப்ரல் – ஜூன் காலாண்டில், நேரடி வரி வசூல், 4.2 சதவீதம் அதிகரித்து, 1.54 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த, ஜூன் நிலவரப்படி, வரி செலுத்துவோர், கூடுதலாக செலுத்திய வரித் தொகையில், 99 சதவீதம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பிளிப்கார்ட் – வால்மார்ட் :
‘வால்மார்ட்’ நிறுவனம், 1,600 கோடி டாலர் மதிப்பில், ‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தின், 77 சதவீத பங்குகளை வாங்கும் பணிகள், கடந்த மாதம் முடிவடைந்தன. அன்னிய முதலீட்டாளர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்த பங்குகளை விற்பனை செய்யும் போது, 20 சதவீத மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டும். இந்த சட்டத்தின்படி, வால்மார்ட் நிறுவனம், முதற்கட்டமாக, பங்கு முதலீட்டாளர்களிடம் பிடித்தம் செய்த, 7,500 கோடி ரூபாயை, வருமான வரி துறைக்கு செலுத்தியுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|