பதிவு செய்த நாள்
18 செப்2018
23:50

நாமக்கல் : புரட்டாசி மாதம் விரதம் துவங்கியுள்ளதால், முட்டை நுகர்வு சரிந்தது. கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு – நெக் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. ஆக.,1ல், 470 காசாக நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் விலை, 2ல், 450; 4ல், 420; 6ல், 390; 9ல், 370 என, படிப்படியாக சரிந்தது. கடந்த, 1ல், 350; 3ல், 330 என, நிர்ணயிக்கப்பட்டது. வட மாநிலங்களில், ‘ஸ்ராவான்’ விரதம் முடிந்துள்ளதால், நுகர்வு அதிகரித்து, முட்டை கொள்முதல் விலை, 360 காசு உயர்ந்தது. இந்நிலையில், இரு நாட்களில், 15 காசு சரிந்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: வட மாநிலங்களில், ‘ஸ்ராவான்’ விரதம், கேரளாவில் மழை உள்ளிட்ட காரணங்களால், நுகர்வு சரிந்து, முட்டைகள் தேக்கமடைந்தன. அதனால், கொள்முதல் விலை குறைக்கப்பட்டது. தற்போது, ‘ஸ்ராவான்’ விரதம் முடிவுக்கு வந்துள்ளதுடன், கேரளாவிலும், இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாலும், நுகர்வு அதிகரித்தது. கொள்முதல் விலை, 30 காசு உயர்ந்தது.
இதற்கிடையில், தமிழகத்தில், புரட்டாசி விரதம் கடைபிடிக்கத் துவங்கியுள்ளனர். இதனால், 10 சதவீதம் நுகர்வு குறைந்துள்ளது. அதனால், தினமும், 30 லட்சம் முட்டைகள் தேக்கமடையும். எனவே கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் குறைந்தால், ஆறு கோடி முட்டைகளை, குளிர்பதன கிடங்கில் பண்ணையாளர்கள் இருப்பு வைத்துவிடுவர். விநாயகர் சதுர்த்தி முடிந்து, ஒரு வாரத்துக்கு, முட்டை விற்பனை சரிவது இயல்பு. அதனால், பெரிய அளவுக்கு, பண்ணையாளர்களுக்கு பாதிப்பு இருக்காது. இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|