பதிவு செய்த நாள்
18 செப்2018
23:51

புதுடில்லி : அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே அதிகரித்து வரும் வர்த்தக மோதலின் தொடர்ச்சியாக, தற்போது, அமெரிக்கா, 20 ஆயிரம் கோடி டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்கள் மீது கூடுதல் வரியை விதித்துள்ளது. இதையடுத்து, வர்த்தக மோதல் மேலும் தீவிரமடையும் என, கருதப்படுகிறது.
சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும், 6,000 பொருட்கள் மீது இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. 24ம் தேதி முதல் அமல்குறிப்பாக, அரிசி, ஜவுளி, போன்றவற்றுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிக வரி விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட, ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படவில்லை.
அமெரிக்காவின் இந்த புதிய வரி விதிப்பு, 24ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. கூடுதல் வரியானது தற்போது, 10 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் ஏற்படாவிட்டால், அடுத்த ஆண்டு ஜனவரி, 1ம் தேதி முதல், 25 சதவீதமாக உயரும் என்றும், அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
எச்சரிக்கை :
மேலும், சீனா பதில் நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், மேலும், 26ஆயிரத்து, 700 கோடி டாலர் மதிப்புள்ள சீன பொருட்களுக்கு, கூடுதல் வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர், டிரம்ப் எச்சரித்திருக்கிறார். இந்நிலையில், அமெரிக்காவின் தற்போதைய நடவடிக்கையை, சீனா எப்படி எதிர்கொள்ளப் போகிறது என தெரியவில்லை.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|