பதிவு செய்த நாள்
18 செப்2018
23:52

புதுடில்லி : இண்டியா மார்ட் மற்றும் அவானா லாஜிஸ்டெக் ஆகிய இரு நிறுவனங்களும், பங்குச் சந்தையில் பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்டிக் கொள்ள, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
இந்த இரு நிறுவனங்களும், ஜூன் மாதத்தில், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, செபிக்கு விண்ணப்பித்திருந்தன. தற்போது அதற்கு, செபி அனுமதி வழங்கி உள்ளது.இண்டியா மார்ட் நிறுவனம், 600 கோடி ரூபாயை, பங்கு வெளியீட்டின் மூலம் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக நிறுவனர்களின், 42 லட்சத்து, 88 ஆயிரத்து, 801 பங்குகள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன.
இண்டியா மார்ட் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ், எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ் மற்றும் ஜெப்ரீஸ் இண்டியா ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்ள இருக்கின்றன. அவானா லாஜிஸ்டெக் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 300 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக, தற்போதைய பங்குதாரர்களின், 43 லட்சம் பங்கு களை விற்பனை செய்ய இருக்கிறது.
பங்கு வெளியீட்டின் மூலமாக திரட்டப்படும் தொகை, மூலதன செலவு களுக்கும் கடன்களை அடைக்கவும், புதிய சேமிப்பு கிடங்குகளை அமைக்கவும் பயன்படுத்த பட உள்ளது. அவானா லாஜிஸ்டெக் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ் மற்றும் ஆக்சிஸ் கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்ள இருக்கின்றன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|