பதிவு செய்த நாள்
18 செப்2018
23:53

பெங்களூரு : ‘இன்போசிஸ் நிறுவனம், அதன் முன்னாள் தலைமை நிதி அதிகாரி ராஜிவ் பன்சாலுக்கு, 12.17 கோடி ரூபாய் வழங்க வேண்டும்’ என, மத்தியஸ்த தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் பன்சால், 2015ல், பணி விலகினார். அப்போது அவருக்கு, இரண்டு ஆண்டு ஊதியம் மற்றும் படிகள் சேர்த்து, மொத்தம், 17.38 கோடி ரூபாய் வழங்குவதாக இன்போசிஸ் கூறியது.அதில், 5.20 கோடி ரூபாய் மட்டுமே, ராஜிவ் பன்சாலுக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து, அவர், மத்தியஸ்த தீர்ப்பாயத்தில் முறையிட்டார். அப்போது, ராஜிவ் பன்சால் மூலம் நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்கு, அவர் தான், ஏற்கனவே வாங்கிய, 5.20 கோடி ரூபாயை திரும்பத் தர வேண்டும் என, இன்போசிஸ் தெரிவித்தது.
இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இன்போசிஸ் கோரிக்கையை நிராகரித்த, மத்தியஸ்த தீர்ப்பாயம், ராஜிவ் பன்சாலுக்கு, எஞ்சிய, 12.17 கோடி ரூபாயை, வட்டி உடன் வழங்க வேண்டும் என, உத்தரவிட்டது. இது, இன்போசிஸ் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக, இன்போசிஸ் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|