பதிவு செய்த நாள்
18 செப்2018
23:54

மும்பை : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி தலைமை செயல் அதிகாரி, சந்தா கோச்சார் தொடர்பான விவகாரத்தில், சுமுக தீர்வு காண விரும்புவதாக, அவ்வங்கி, ‘செபி’க்கு தெரிவித்துள்ளது.
வீடியோகான் நிறுவனத்திற்கு, 3,600 கோடி ரூபாய் கடன் வழங்கி, தன் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்திற்கு ஆதாயம் பெற்றுத் தர உதவியதாக, சந்தா கோச்சார் மீது குற்றச்சாட்டு உள்ளது.அத்துடன், தீபக் கோச்சார் நிறுவனங்கள் மீது, பங்குச் சந்தை விதிமீறல்கள் குறித்த புகார்களும் உள்ளன. இந்த புகார்களை, சந்தா கோச்சார் மறுத்து உள்ளார்.
இந்நிலையில், புகார்களை விசாரித்த, 'செபி', சட்ட நடவடிக்கை எடுக்கும் முன், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, சந்தா கோச்சார் உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்டு ‘நோட்டீஸ்’ அனுப்பியிருந்தது.
இந்நிலையில், நேற்று, ‘செபி’ தலைவர் அஜய் தியாகி கூறுகையில், “சந்தா கோச்சார் பிரச்னையில், ‘செபி’ விதிமுறைப்படி, கோர்ட்டுக்கு வெளியே தீர்வு காண விரும்புவதாக, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி பதில் அனுப்பியுள்ளது,” என்றார்.
பங்குச் சந்தை விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு, ‘செபி’ அபராதம் விதிப்பதுடன், பங்கு வர்த்தகத்தில் ஈடுபடவும் தடை விதிக்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|