உலக சந்தைக்கு செல்லும் ‘ராயல் என்பீல்டு’ தயாரிப்புகள்உலக சந்தைக்கு செல்லும் ‘ராயல் என்பீல்டு’ தயாரிப்புகள் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 குறைவு ...
சர்க்கரை துறைக்கு ரூ.5,500 கோடி ஊக்க சலுகை; கரும்பு விவசாயிகள் ஆதரவு தொகை இரு மடங்கு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2018
06:11

புதுடில்லி : சர்க்­கரை துறைக்­கான, 5,538 கோடி ரூபாய் ஊக்­கச் சலுகை திட்­டத்­திற்கு, பொரு­ளா­தார விவ­கா­ரங்­க­ளுக்­கான மத்­திய அமைச்­ச­ர­வைக் குழு, நேற்று ஒப்­பு­தல் வழங்­கி­யது.

இக்­கு­ழு­வின் கூட்­டம்,டில்­லி­யில், மத்­திய நிதி­ய­மைச்­சர், அருண் ஜெட்லி தலை­மை­யில் நடை­பெற்­றது. அதில், கரும்பு விவ­சா­யி­க­ளின், 13 ஆயி­ரம் கோடி ரூபாய் நிலு­வைக்கு தீர்வு காண­வும், உபரி சர்க்­கரை இருப்பை கையா­ள­வும், மத்­திய உணவு அமைச்­ச­கம் அளித்த, 5,538 கோடி ரூபாய் ஊக்­கச் சலுகை திட்­டத்­திற்கு, ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­டது.

இதில், உபரி சர்க்­கரை உற்­பத்­திக்­காக, கரும்பு விவ­சா­யி­க­ளுக்கு, உற்­பத்தி ஆத­ரவு திட்­டத்­தின் கீழ், 4,163 கோடி ரூபாய் வழங்­கப்­படும். சர்க்­கரை ஆலை­க­ளின் போக்­கு­வ­ரத்து உள்­ளிட்ட செல­வி­னங்­க­ளுக்கு, 1,375 கோடி ரூபாய் அளிக்­கப்­படும். இத்­திட்­டம், 2018 -– 19ம் ஆண்­டில், அக்., – செப்., சந்தை பரு­வத்­தில் அம­லுக்கு வர உள்­ளது. இத­னால், கரும்பு விவ­சா­யி­க­ளின் நிலுவை, சர்க்­கரை ஆலை­க­ளின் நிதி நெருக்­கடி ஆகிய பிரச்­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

உபரி உற்பத்தி :
நாட்­டின் சர்க்­கரை தேவையை விட, அதன் உற்­பத்தி அதி­க­மாக உள்­ளது. அதே­ச­ம­யம், சர்­வ­தேச சந்­தை­யில், சர்க்­கரை விலை குறை­வாக உள்­ளது. இத­னால், சர்க்­கரை ஆலை­கள், ஏற்­று­ம­தி­யில் ஆர்­வம் காட்­டா­மல் உள்­ளன. அவை, கரும்பு விவ­சா­யி­க­ளுக்கு, 22 ஆயி­ரம் கோடி ரூபாய் நிலுவை வைத்­தி­ருந்­தன. இதை­ய­டுத்து, மத்­திய அரசு, கடந்த ஜூன் மாதம், சர்க்­கரை துறைக்கு, 8,500 கோடி ரூபாய் ஊக்­கச்சலுகை திட்­டத்தை அறி­வித்­தது.

அதன்­படி, சர்க்­கரை ஆலை­க­ளின், எத்­த­னால் உற்­பத்­திக்கு, வட்­டி சலு­கை­யு­டன், 4,400 கோடி ரூபாய் கடன்; கரும்பு விவ­சா­யி­க­ளுக்கு, உற்­பத்தி ஆத­ரவு விலை­யாக, 1 குவின்­டா­லுக்கு, 5.50 ரூபாய் வீதம், 1,540 கோடி ரூபாய் அளிக்­கப்­படும் என, தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

நிலுவைக்கு தீர்வு :
இந்­நி­லை­யில், சர்க்­கரை துறைக்கு, இரண்­டாம் கட்­ட­மாக, ஊக்­கச் சலுகை திட்­டம் அம­லுக்கு வர உள்­ளது. இத­னால், ஆலை­கள், கரும்பு விவ­சா­யி­க­ளுக்கு, எஞ்­சிய, 13,500 கோடி ரூபாய் நிலு­வையை வழங்­கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

புதிய ஊக்­கு­விப்பு :
திட்­டத்­தில், வரும் சந்தை பரு­வத்­தில், கரும்பு விவ­சா­யி­க­ளின் உற்­பத்தி ஆத­ரவு தொகை, இரு மடங்­காக உயர்த்­தப்­பட்டு, 1 குவின்­டா­லுக்கு, 13.88 ரூபா­யாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. இத்­தொகை, தற்­போ­தைய நடை­மு­றைப்­படி, சர்க்­கரை ஆலை­கள் மூலம், கரும்பு விவ­சா­யி­க­ளின் வங்கி கணக்­கில், நேர­டி­யாக வரவு வைக்­கப்­படும்.

ஏற்றுமதி :
இது தவிர, குறைந்­த­பட்ச ஏற்­று­மதி திட்­டத்­தின் கீழ், ஆலை­கள் ஏற்­று­மதி செய்­யும், 50 லட்­சம் டன் சர்க்­க­ரைக்கு, உள்­நாட்டு சரக்கு போக்­கு­வ­ரத்து உள்­ளிட்ட செல­வு­களை, அரசே ஏற்­றுக் கொள்­ளும். இதன்­படி, கட­லோர மாநி­லங்­களில், துறை­மு­கத்­தில் இருந்து, 100 கி.மீ.,க்குள் உள்ள சர்க்­கரை ஆலை­க­ளுக்கு, டன்­னுக்கு, 1,000 ரூபாய் வழங்­கப்­படும். 100 கி.மீ.,க்கு மேற்­பட்ட துாரத்­தில் உள்ள ஆலை­க­ளுக்கு, 2,500 ரூபாய் தரப்­படும்.

இதர மாநி­லங்­களில் உள்ள ஆலை­க­ளுக்கு, 1 டன் சர்க்­க­ரைக்கு, 3,000 ரூபாய், சரக்கு போக்­கு­வ­ரத்து செல­வாக வழங்­கப்­படும் என, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

சர்க்­கரை உற்­பத்தி :
நடப்பு செப்­டம்­ப­ரு­டன் முடி­யும், 2017- – 18ம் சந்தை பரு­வத்­தில், சர்க்­கரை உற்­பத்தி, 3.20 கோடி டன்­னாக உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. உள்­நாட்­டில், சர்க்­கரை நுகர்வு, ஆண்­டுக்கு, 2.60 கோடி டன்­னாக உள்­ளது. இத­னால், முந்­தைய கையி­ருப்­பு­டன் சேர்த்து, சர்க்­கரை இருப்பு, 1 கோடி டன்­னாக உய­ரும். வரும் சந்தை பரு­வத்­தில், சர்க்­கரை உற்­பத்தி, 3.50 கோடி டன்­னாக உய­ரும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)