சுங்க வரி உயர்வால் பயனில்லை; தொடர் சரிவில் பங்கு சந்தைசுங்க வரி உயர்வால் பயனில்லை; தொடர் சரிவில் பங்கு சந்தை ... ரூ.70 லட்சம் கோடியை தொடும் ரியல் எஸ்டேட் சந்தை; ஒப்பந்த மதிப்பு, 5 ஆண்டுகள் காணாத உயர்வு ரூ.70 லட்சம் கோடியை தொடும் ரியல் எஸ்டேட் சந்தை; ஒப்பந்த மதிப்பு, 5 ஆண்டுகள் ... ...
முதன் முறையாக சீனாவுக்கு அரிசி ஏற்றுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2018
00:52

புது­டில்லி : இந்­தியா, சீனா­வுக்கு முதன் முறை­யாக, பாசு­மதி வகை­யைச் சாராத அரி­சியை, இன்று ஏற்­று­மதி செய்ய உள்­ளது.

மஹா­ராஷ்­டிர மாநி­லம், நாக்­பூ­ரில் இருந்து, முதல் தவ­ணை­யாக, 100 டன் அரிசி ஏற்­று­மதி செய்­யப்­பட உள்­ள­தாக, மத்­திய வர்த்­தக அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது. சீனா, இந்­தி­யா­வில் இருந்து பாசு­மதி அரி­சியை மட்­டும் இறக்­கு­மதி செய்து வரு­கிறது. இந்­நி­லை­யில், மேலும் அதிக வேளாண் பொருட்­கள் ஏற்­று­ம­திக்கு அனு­ம­திக்க வேண்­டும் என, இந்­தியா கோரிக்கை விடுத்­தது. இதை ஏற்று, பாசு­மதி வகையை சாராத அரிசி இறக்­கு­ம­திக்கு, சீனா அனு­மதி அளித்­து உள்­ளது.

இதை­ய­டுத்து, சில மாதங்­க­ளுக்கு முன், தாவர வகை­பாடு, பாது­காப்பு, பரா­ம­ரிப்பு உள்­ளிட்ட அம்­சங்­கள் தொடர்­பான நடை­மு­றை­க­ளுக்கு, இரு நாடு­களும் ஒப்­பு­தல் அளித்­தன.அதன்­படி, பதிவு செய்­யப்­பட்ட, தரச் சான்று பெற்ற, 19 அரிசி ஆலை­களில் தயா­ரா­கும், அரிசி மட்­டுமே, சீனா­வுக்கு ஏற்­று­மதி செய்­யப்­படும். மண், கல், நெல், உமி உள்­ளிட்ட பொருட்­க­ளின்றி, சுத்­த­மான அரிசி மட்­டுமே அனுப்ப வேண்­டும். அரிசி கிடங்­கு­கள் சுகா­தா­ர­மான முறை­யில், பூச்­சி­கள், புழுக்­க­ளின்றி, பாது­காப்பு விதி­மு­றை­க­ளின்­படி, பரா­ம­ரிக்க வேண்­டும்.

ஏற்­று­மதி செய்­யப்­படும் அரி­சி­யில், வண்டு உள்­ளிட்ட பூச்­சி­களோ அல்­லது பூச்சி தாக்­கு­தலோ இருக்­கக் கூடாது என்­பதை, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் உறுதி செய்­வ­தும் அவ­சி­யம். இந்த விதி­மு­றை­களை பின்­பற்றி, இந்­தியா, முதன் முறை­யாக, இன்று சீனா­வுக்கு, 100 டன் அரி­சியை ஏற்­று­மதி செய்ய உள்­ளது.

வர்த்­தக பற்­றாக்­குறை :
இந்­தியா, சீனா­வுக்கு ஏற்­று­மதி செய்­வதை விட, பல மடங்கு அதி­க­மாக, சீனா, இந்­தி­யா­வுக்கு ஏற்­று­மதி செய்­கிறது. இத­னால், இந்­தி­யா­வின் வர்த்­த­கப் பற்­றாக்­குறை அதி­க­ரித்­துள்­ளது. கடந்த, 2016 -– 17ம் நிதி­யாண்­டில், 5,108 கோடி டால­ராக இருந்த, வர்த்­த­கப் பற்­றாக்­குறை, 2017 -– 18ல், 6,312 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. இதை குறைக்க, சந்தை வாய்ப்பை விரி­வு­ப­டுத்­து­மாறு சீனா­வி­டம், இந்­தியா கோரிக்கை விடுத்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)