பதிவு செய்த நாள்
28 செப்2018
23:51
சென்னை: தமிழகத்தில், தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கான, பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நவீனமயமாக்கப்பட உள்ளன.இது குறித்து, மத்திய தோல் ஆய்வு மையத்தின் இயக்குனர், பி.சந்திரசேகரன் கூறியதாவது:இந்தியாவில், தோல் தொழிற்சாலை பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்படுகிறது. இதில், பெரும்பாலான நிலையங்கள் அமைக்கப்பட்டு, 10 – -15 ஆண்டுகள் ஆவதால், அவற்றை நவீனமயமாக்க, மத்திய அரசு, 782 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.இத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, தமிழகத்தில், ஒன்பது பொது சுத்திகரிப்பு நிலையங்கள், 300 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டுமின்றி, தோல் துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பொது சுத்திகரிப்பு நிலையங்களை நவீனமயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.தென் மாநிலங்களில் மட்டும், 600 தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவு நீர், 13 பொது சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|