பதிவு செய்த நாள்
28 செப்2018
23:52

மும்பை: ‘‘யெஸ் பேங்க் பங்குகளை, ஒருபோதும் விற்க மாட்டேன்,’’ என, அதன் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான, ரானா கபூர் தெரிவித்து உள்ளார். இவர், தன் மைத்துனர்அசோக் கபூருடன் இணைந்து, 2004ல் யெஸ் பேங்கை தோற்றுவித்தார். இந்நிலையில், விதிமுறைகளை சுட்டிக் காட்டி, ‘2019, ஜனவரியில், ரானா கபூர் பதவி விலக வேண்டும்’ என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதையடுத்து, புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்ந்தெடுக்க, யெஸ் பேங்க் இயக்குனர் குழு, அவகாசம் கோரி உள்ளது.
இந்நிலையில், ரானா கபூர், ‘டுவிட்டரில்’ வெளியிட்டுள்ள செய்தி: யெஸ் பேங்க் பொறுப்பில் இருந்து விலகினாலும், வங்கியின் வளர்ச்சிக்கு என் பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருவேன். ரிசர்வ் வங்கி மற்றும் யெஸ் வங்கி இயக்குனர் குழுவின் வழிகாட்டுதலை முழுமையாக பின்பற்றுவேன்.யெஸ் பேங்க் பங்குகளை ஒருபோதும் விற்க மாட்டேன். இது குறித்து, உயில் எழுதி வைத்து உள்ளேன். அதில், நான் வைத்துள்ள, 4.34 சதவீத பங்குகள், என் மூன்று மகள்களுக்கும், அதன் பின், அவர்களின் குழந்தைகளுக்கும் உரித்தாகும் என, எழுதியுள்ளேன். ஒரு பங்கை கூட விற்கக் கூடாது என, தெரிவித்துள்ளேன். யெஸ் பேங்க் பங்குகள், என்றும் ஜொலிக்கும் வைரங்கள் அல்லவா!இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|