பதிவு செய்த நாள்
28 செப்2018
23:53

திருப்பூர்: பின்னலாடை துறை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றித் தர, மத்திய ஜவுளி செயலர் மற்றும் ஜி.எஸ்.டி., உதவி கமிஷனரிடம், ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர், ராஜாசண்முகம், மத்திய, ஜி.எஸ்.டி., உதவி கமிஷனர் சுமித் பாட்டியா மற்றும் ஜவுளித்துறை செயலர் ராகவேந்தர் சிங்கை, டில்லியில் சந்தித்து, பின்னலாடை துறையின் கோரிக்கைகளை முன்வைத்தார். ஜி.எஸ்.டி.,க்குப் பின், ஏற்றுமதிக்கு வழங்கப்பட்டு வந்த, 7.7 சதவீத, ‘டியூட்டி டிராபேக்’ 2 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஏற்றுமதி சரிவடைந்து வருவதால், டியூட்டி டிராபேக் அதிகரிக்க வேண்டும்.பெரும்பாலான ஏற்றுமதி நிறுவனங்கள், ஆடை ஏற்றுமதியின்போது, தங்கள் கணக்கில் உள்ள, உள்ளீட்டு வரியை (இன்புட் கிரெடிட்) பயன்படுத்தி, ஐ.ஜி.எஸ்.டி., வரி செலுத்துகின்றன. அதன் பின், வரி துறையில் விண்ணப்பித்து, செலுத்திய வரியை ரீபண்டு பெறுகின்றன.கடந்த, 15 நாட்களுக்கு முன் வெளியான அறிக்கையில், ‘இ.பி.சி.ஜி., போன்ற அரசு சலுகைகளை பயன்படுத்தி வரி விலக்குடன் பொருட்கள் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், ஆடை ஏற்றுமதியின்போது, எல்.யு.டி., (லெட்டர் ஆப் அன்டர்டேக்கிங்) வழிமுறையை மட்டுமே பின்பற்ற வேண்டும்’ என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த முறையில், ரீபண்டு பெறுவது சிக்கலானதாக உள்ளது. எனவே, அனைத்து நிறுவனங்களும், ஐ.ஜி.எஸ்.டி., செலுத்தி ரீபண்டு பெறும் வழிமுறையை பின்பற்ற அனுமதிக்க வேண்டும். தொழிலாளர் குடியிருப்பு, பின்னலாடை துறை ஆய்வகம் ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ராஜாசண்முகம் கூறுகையில், ‘‘திருப்பூரின் தொழில் நிலை குறித்து நேரில் பார்த்து தெரிந்து கொள்ள, அடுத்த மாதம், ஜவுளித்துறை செயலர் சம்மதித்து உள்ளார்,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|