பதிவு செய்த நாள்
28 செப்2018
23:55

புதுடில்லி: டாடா குழும நிறுவனம், டில்லியில், புகழ் பெற்ற, தாஜ் மான்சிங் ஐந்து நட்சத்திர ஓட்டல் குத்தகைக்கான ஏலத்தில் பங்கேற்று, அதை தக்க வைத்துக் கொண்டது.டில்லியில், பிரசித்தி பெற்ற, லுட்யான் பகுதியில், பிரமாண்டமான, தாஜ் மான்சிங் ஐந்து நட்சத்திர ஓட்டல் அமைந்து உள்ளது. இந்த ஓட்டல், டாடா குழுமத்தைச் சேர்ந்த, இந்தியன் ஓட்டல்ஸ் கம்பெனி, 1978ல் குத்தகைக்கு பெற்றது. இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட, 33 ஆண்டு குத்தகை உரிமம், 2011ல் காலாவதியானது. இதையடுத்து, மீண்டும் ஓட்டலை குத்தகைக்கு விட, டில்லி மாநகராட்சி முடிவு செய்தது. எனினும், மறு ஏலம் தொடர்பான வழக்கு காரணமாக, ஏலம் விட முடியவில்லை. அதனால், ஒன்பது முறை குத்தகை காலம் நீட்டிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில், நிலுவையில் இருந்த வழக்கு பைசலானதைத் தொடர்ந்து, நேற்று, ஓட்டல் குத்தகைக்கான ஏலம் நடைபெற்றது.அதில், இந்தியன் ஓட்டல்ஸ், மாதம், 7.03 கோடி ரூபாய் உரிமத் தொகை வழங்குவதாக கூறி, ஓட்டலை தக்கவைத்துக் கொண்டது. இத்தொகை ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த, 3.94 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது, இரு மடங்கு அதிகமாகும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|