சிறு­சே­மிப்பு வட்டி விகிதம் உயர்வு: முத­லீட்டு உத்­தி­யில் மாற்­றம் தேவையா?சிறு­சே­மிப்பு வட்டி விகிதம் உயர்வு: முத­லீட்டு உத்­தி­யில் மாற்­றம் ... ... குடும்ப வர்த்தகத்தில்  இளம் தலைமுறை ஆர்வம் குடும்ப வர்த்தகத்தில் இளம் தலைமுறை ஆர்வம் ...
ஏற்ற இறக்­க­மான சந்­தை­யில் தவிர்க்க வேண்­டிய செயல்­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 அக்
2018
03:59

பங்­குச்­சந்தை அண்­மை­யில் பெரும் சரி­வுக்கு உள்­ளா­னது. ஒரே நாளில் சென்­செக்ஸ், 1,000 புள்­ளி­க­ளுக்கு மேல் இழந்து பின் மீண்­டது. சந்தை இவ்­வாறு ஏற்ற இறக்­கத்­திற்கு உள்­ளா­கும் போது, முத­லீட்­டா­ளர்­களுக்கு கவலை ஏற்­ப­டு­வது இயற்­கை­யா­னது. பொது­வாக ஏற்ற இறக்­க­மான சந்­தை­யில் தவிர்க்க வேண்­டிய செயல்­கள் இவை:
பீதி­யால் விற்­பனைபங்­குச்­சந்தை ஏற்ற இறக்­கத்­திற்கு உள்­ளா­கும் போது, முத­லில் தவிர்க்க வேண்­டிய விஷ­யம் அச்­சத்­தின் கார­ண­மாக முடிவு எடுப்­பது தான். சந்தை போக்கு தரும் அச்­சத்­தால், உணர்ச்­சி­ம­ய­மான முடிவு எடுக்கக் கூடாது. முக்­கி­ய­மாக பங்­கு­களை விற்று விட்டு வெளி­யேற துடிக்க கூடாது. அடிப்­படை அம்­சங்­களை மன­தில் கொள்ள வேண்­டும்.
எஸ்.ஐ.பி.,யை தொட­ர­வும்மியூச்­சு­வல் பண்ட் திட்­டங்­களில், எஸ்.ஐ.பி., முறை­யில் முத­லீடு செய்­துள்­ள­வர்­கள், அந்த முத­லீட்டை இந்த கட்­டத்­தில் நிறுத்­தி­வி­டக்­கூ­டாது. எஸ்.ஐ.பி., முத­லீட்டை நிறுத்­து­வ­தன் மூலம், சம­ பங்­கு­க­ளின் மறு­மு­த­லீடு பலனை இழக்க வேண்டி வர­லாம். சரிவு காலத்­தில் குறைந்த விலை­யில், அதிக யூனிட்­களை வாங்க முடி­யும்.
குறைந்த விலை பங்­கு­கள்சந்தை சரி­வுக்கு உள்­ளா­கும் போது, நல்ல பங்­கு­கள் குறைந்த விலை­யில் கிடைப்­ப­தற்­கான வாய்ப்பு உள்­ளது. ஆனால், குறைந்த விலை பங்­கு­களை எல்­லாம், கண்ணை மூடிக்­கொண்டு வாங்­கு­வதை தவிர்க்க வேண்­டும். அடிப்­படை அம்­சங்­களை கொண்டே ஒரு பங்கு மதிப்பு மிக்­கதா... என, தீர்­மா­னிக்க வேண்­டும்.ஒரே துறை பங்­கு­கள்சந்­தை­யில் ஏற்­பட்ட சரிவு கார­ண­மாக குறிப்­பிட்ட துறை சார்ந்த பங்­கு­கள், குறைந்த விலை­யில் கவர்ந்­தி­ழுக்­க­லாம். ஆனால், ஒரே துறையை சார்ந்த பங்­கு­களை வாங்­கு­வதை தவிர்க்க வேண்­டும். பர­வ­லாக்­கம் தான் சரி­யான உத்தி என்­பதை நினை­வில் கொள்ள வேண்­டும். ஆனால், மிகை பர­வ­லாக்­க­மும் நல்­லது அல்ல.
கட­னில் பங்­கு­கள்எப்­போ­துமே கடன் வாங்கி முத­லீடு செய்­வது நல்ல உத்தி அல்ல. பங்­கு­கள் சரிந்து, குறை­வான விலை­யில் பரி­வர்த்­தனை செய்­யப்­ப­டு­வது, நல்ல வாய்ப்­பாக தோன்­ற­லாம். ஆனால், கடன் வாங்கி குறைந்த விலை பங்­கு­களை வாங்கி குவிப்­பது தவிர்க்க வேண்­டிய செய­லா­கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)