பதிவு செய்த நாள்
05 அக்2018
00:12

வாஷிங்டன்:உலக வங்கி, அதன் திட்டங்களை செயல்படுத்த, 78 இந்திய நிறுவனங்கள் மற்றும் சில தனி நபர்களுக்கு தடை விதித்துள்ளது.
மோசடி,
ஊழல், கூட்டுச் சதி, நிர்ப்பந்தித்தல், கட்டாயப்படுத்துதல் ஆகிய
புகார்கள் தொடர்பாக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவைச்
சேர்ந்த, ஆலிவ் ஹெல்த் கேர், ஜெய்மோடி நிறுவனங்கள்,
வங்கதேசத்தில், உலக வங்கியின் திட்டங்களை மேற்கொண்டுள்ளன.இந்நிறுவனங்கள், மோசடி, லஞ்ச ஊழலில் ஈடுபட்டதால், அத்திட்டங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளன. இனி,
ஆலிவ் ஹெல்த் நிறுவனம், 10 ஆண்டுகளுக்கு உலக வங்கியின் திட்டங்களை
செயல்படுத்த முடியாது. ஜெய்மோடி நிறுவனத்திற்கு, 7.6
ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியா மற்றும்
நேபாளத்தில் திட்டங்களை மேற்கொண்டு வரும், இந்தியாவின் ஆஞ்சலிக்
இன்டர்நேஷனல் நிறுவனம் மீது, மோசடி மற்றும் லஞ்ச ஊழல் புகார்கள்
உள்ளன.
இந்நிறுவனத்திற்கு, உலக வங்கியின் திட்டங்களை மேற்கொள்ள, 4.6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளன.
அர்ஜென்டினா
மற்றும் வங்கதேசத்தில் திட்டங்களை செயல்படுத்தும்,
இந்தியாவின், ‘பேமிலி கேர்’ நிறுவனத்திற்கு, நான்கு ஆண்டுகள் தடை
விதிக்கப்பட்டுள்ளது.‘மதுக்கான் புராஜெக்ட்ஸ், ஆர்.கே.டி.,
கன்ஸ்ட்ரக் ஷன்’ ஆகிய நிறுவனங்களுக்கு, முறையே, இரண்டு மற்றும் 1.6
ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளன.இந்த வகையில், இந்தி யாவைச் சேர்ந்த, 78 நிறுவனங்கள் மற்றும் சில நபர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஓராண்டு தடை
இந்தியாவைச் சேர்ந்த, ‘தத்வி குளோபல்என்விரோன்மென்ட்,
எஸ்.எம்.இ.சி., (இந்தியா), மெக்லாய்ட்ஸ் பார்மாசூட்டிக்கல்’
உள்ளிட்ட நிறுவனங்கள், உலக வங்கியின் திட்டங்களை மேற்கொள்ள,
ஓராண்டு வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்து நிறுவனங்களுக்கு,
நிபந்தனை அடிப்படையில், பணியை தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|